அமெரிக்கப் பாப் இசைப் பாடகி ஒருவர் காணாமல் போன தன்னுடைய 2 நாய்க்குட்டிகளைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 3.6 கோடி ருபாய் பரிசு வழங்க முன்வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இசையால் கவர்ந்தவர் (Fascinated by music)
ஸ்டீபனி ஜான் ஏஞ்சலினா ஜெர்மன்நோட்டா என்ற இயற்பெயர் கொண்ட 34 வயதான பிரபல அமெரிக்க பாடகி, நடிகை லேடி காகா.
இந்தியாவிலும் ரசிகர்கள் (Fans in India too)
மடோனா, ஜெனிபர் லோபஸ் ஆகியோரை அடுத்து உலக அளவில் பிரபலம் அடைந்த பாப் இசைப் பாடகி லேடி காகா. இவருக்கு இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உண்டு.
இவர் செல்லமாக வளர்த்த இரண்டு ஃபிரஞ்சு புல்டாக் ரக நாய்கள் அண்மையில் மாயமாயின. நாய்களை பறிகொடுத்த காகா, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
அதில், கோஜி, கஸ்டவ் ஆகிய எனது இரண்டு செல்ல நாய் குட்டிகளும் அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் காணாமல் போயின. இவற்றை கண்டுபிடித்து தருபவருக்கு 3.6 கோடி ருபாய் பரிசுத்தொகை அளிக்க நான் தயாராக உள்ளேன்.இது அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவியது.
நாய்கள் கடத்தல் (Dog abduction)
நாய்களில் பிரெஞ்சு புல்டாக் அதிகமாக கடத்தப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் இவை மிகவும் அரிதான உயிரினங்கள். இதனால் இவற்றை அதிக விலை கொடுத்து வாங்க பணக்காரர்கள் முண்டியடிப்பர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலஸ் சேர்ந்த நாய் கடத்தல் கும்பல் கோஜி, கெஸ்டவ் ஆகிய இரண்டு நாய்களையும் கடத்தியிருக்கலாம் என சந்தேகப்பட்ட அமெரிக்க போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையில், மூன்று ஃபிரஞ்சு புல்டாகுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றை கடத்திய திருடர்கள் தப்பி ஓடினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க...
அஞ்சல் துறையில் வாகன ஓட்டுநராக விருப்பமா?- தகுதி 10ம் வகுப்பு மட்டுமே!
ஒரு கப் தேநீர் 1,000 ரூபாய் - இங்கில்லை, கொல்கத்தாவில்!
நல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்!
Share your comments