சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் அல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதற்காக முத்ரா யோஜனா திட்டம் (Muthra Yojana Scheme) மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மூன்று பிரிவுகளில் கடனுதவி
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. சிஷு (Shishu) என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் (Kishor) என்ற பெயரில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் (Tarun) என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.
விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலுக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்காது. இந்தக் கடனுக்காக எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது. புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனளிக்கும். எந்தவொரு வங்கியிலும் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தில் அடையாளச் சான்று, இருப்பிட சான்று, புகைப்படம், இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது, சப்ளையர் விபரங்கள், தொழிற்சாலை இருக்கும் இடம் போன்ற விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ரூ.50,000 வரையில் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
நிபந்தனைகள்
இந்தக் கடனை வாங்குவதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஆறு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இரண்டு, நீங்கள் சிறு, குறு தொழில் முனைவோராக இருக்கவேண்டும். பிஎம் ஸ்வநிதி போர்ட்டலில் விண்ணப்ப எண் உங்களிடம் இருக்க வேண்டும்.
இந்தக் கடனைப் பெற நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். https://emudra.sbi.co.in:8044/emudra என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க
வியக்க வைக்கும் மக்கள் தொகை: இன்று உலக மக்கள் தொகை தினம்!
ஓய்வூதியம் பெறுவோர் குறைகளை தீர்க்க பென்சன் அதாலத் என்ற குறைதீர்க்கும் முகாம்!
Share your comments