2021-22ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகையான ரூ.7,000த்தைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு (For students with disabilities)
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு முதல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, மருத்துவக்கல்வி, பி.இ, பிடெக். வரை ரூபாய் ஆயிரம் முதல் ரூ.7000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வி உதவித் தொகை (Scholarship)
சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு முதல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, மருத்துவக்கல்வி, பி.இ, பிடெக். வரை ரூபாய் ஆயிரம் முதல் ரூ.7000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் கடந்த சில வருடங்களாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, 2021-22ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை http://www.chennai.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை – 600006 என்ற முகவரிக்கு அனுப்புமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதேபோல், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை சார்பிலும் வழங்கப்படும் ரூ.7000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் 2021-2022ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை , மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் மூலம் வழங்கப்படுகிறது. இதில் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ரூ.7000 முதல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு scholorship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலக்கெடு (Last Date)
இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்புபவர்கள் 15.11.2021க்கு முன்பாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!
வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!
Share your comments