நாம் செய்யும் முதலீட்டிற்கு என்ன பாதுகாப்பு இருப்பது என்பதை உறுதி செய்துகொள்வதே புத்திசாலித்தனம்.அந்த வகையில், கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அது எப்போதுமே அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்தான். இதன் காரணமாக, இந்திய தபால் துறை சேமிப்பு திட்டங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானதாகவும், நிறைய லாபமும் கிடைக்கிறது.
தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்று ரெக்கரிங் டெபாசிட் திட்டம்.(Recurring Deposit Scheme) இந்த திட்டத்தின் கீழ் தினந்தோறும் 70 ரூபாய் முதலீடு செய்து வந்தால், அடுத்த 5 காலத்தில் மொத்தமாக ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைக்கக்கூடும்.
5 ஆண்டுகள்
இந்தத் திட்டத்தின் கீழ், வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இதில், குழந்தையின் பெயரிலும் கணக்குகளை தொடங்கி முதலீடு செய்யலாம். இதன் மூலம், அவர்களுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கலாம்.நீங்கள் குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்கும் பட்சத்தில், குழந்தையின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கானக் கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும்.
திட்டம் செயல்படும் முறை
நீங்கள் குழந்தையின் பெயரில் கணக்குத் தொடங்கி, தினமும் ரூ70 முதலீடு செய்தால், மாதம் 2,100 ரூபாய் செலுத்த வேண்டும். அந்த வகையில், 5 ஆண்டுக்கால முதிர்ச்சி காலத்தின்போது, நீங்கள் முதலீடு செய்தத் தொகை 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த பணத்திற்கு ஒரு ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டித் தொகை செலுத்தப்படும்.
தற்போது ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, 5 ஆண்டு காலத்தில் சுமார் 20 ஆயிரம் வட்டித் தொகையாகக் கிடைக்கிறது. எனவே, முதிர்வு காலத்தில் உங்களுக்கு 1 லட்சத்து 46 ஆயிரம் கைக்குக் கிடைக்கிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் தனிக் கணக்காகவோ அல்லது இணைப்பு கணக்காகவோத் தொடங்கலாம். மைனர் பெயர்களில் பெற்றோர் கணக்குத் தொடங்கலாம். இல்லையெனில், 10 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளும் கணக்குகளைத் தாரளமாகத் தொடங்கலாம்.
மேலும் படிக்க...
Share your comments