1. Blogs

திருமணம் ஆனவர்களுக்கு மாதம் ரூ.5000-சூப்பர் வாய்ப்பு !

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

கொரோனா காலங்கள், நமக்கு சேமிப்பின் உன்னதத்தை உணர்த்தி இருக்கின்றன. அந்த வகையில், போஸ்ட் ஆபீஸ் மூலமாக மாதம் 5000 ரூபாய் வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

சேமிப்பு அவசியம்

பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக நிறைய திட்டங்களை இந்திய தபால் துறை செயல்படுத்திவருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் மாத வருமானத் திட்டம்.
இத்திட்டத்தின் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டும் பணத்தை முதலீடு செய்தால் போதும். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகை பென்சன் போல வந்துகொண்டே இருக்கும். ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு மீண்டும் 5 ஆண்டுகளுக்குக் கூட கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம்.

கணவன்- மனைவி

இத்திட்டத்தின் கீழ் நீங்கள் தனிக் கணக்காகவோ அல்லது இணைப்புக் கணக்காகவோ தொடங்கலாம். திருமணம் ஆனவர்கள் கணவன் - மனைவி இணைந்து கூட்டுக் கணக்காக திறக்கலாம். ஆரம்ப முதலீடு 1000 ரூபாய் போதுமானது. இத்திட்டத்தில் அதிகபட்சம் நீங்கள் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்காக இருந்தால் அதிகபட்ச முதலீடு ரூ.9 லட்சம்.

வட்டி

மாத வருமானத் திட்டத்துக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதமாக உள்ளது.

கணக்கு தொடங்க

இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.

ஆவணங்கள்

ஆதார் கார்டு கட்டாயம். ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தேவைப்படும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 கொடுக்க வேண்டும். இத்திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் ஆன்லைனிலேயே கிடைக்கும். அதைப் பூர்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.

ரிஸ்க் இல்லை

முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பங்குச் சந்தை போன்ற நிறைய ஆப்சன்கள் இருக்கின்றன. ஆனால் அதில் ரிஸ்க் அதிகம். எனவே போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது நல்ல தேர்வாக இருக்கும். இதில் ரிஸ்க் இல்லை. அரசின் பாதுகாப்பும் உள்ளது என்பதால், துணிந்து முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க...

இந்த 5 ரூபாய் இருந்தால் ரூ.30,000 சம்பாதிக்கலாம்!

மனைவி பெயரில் வீடு கட்ட சலுகை-எஸ்பிஐ அறிவிப்பு!

English Summary: Rs.5000-Super Opportunity per month for married people! Published on: 19 June 2022, 09:39 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.