சும்மா இருப்பதற்கே அதிக சம்பளம் பெற்று வருகிறார் ஜப்பானை சேர்ந்த ஷோஜி மொரிமோட்டோ. நம்ப முடிகிறதா? நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில், சும்மா இருப்பது என்பது மிகவும் கஷ்டம்தான். ஆனால், இவர் அதற்கும் சம்பளம் வாங்குகிறார் என்பது தான் உண்மை.
நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைப்பதே குதிரைக்கொண்பாகிவிட்ட இந்த காலத்தில், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதற்கு நல்ல சம்பளம் பெற்று வருகிறார் ஜப்பான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர்.
ஜப்பான் தலைநகர் டோக்யோவை சேர்ந்தவர் ஷோஜி மொரிமோட்டோ. 38 வயதான ஷோஜி எந்த வேலையும் செய்யாமல் சும்மா பணம் சம்பாதிக்க ஒரு ஐடியாவை கண்டுபிடித்து, தொழிலை தொடங்கி லாபமும் சம்பாதித்து வருகிறார்.
கம்பெனி கொடுப்பது
சுருக்கமாக சொன்னால், நண்பர்கள் இல்லை, துணைக்கு ஆள் வேண்டும், ஜாலியாக ஊர் சுற்றுவதற்கு கம்பெனி வேண்டும் போன்றவர்கள் ஷோஜியை வாடகைக்கு அழைத்து செல்கின்றனர்.
இவரும் அவர்களுடன் ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது, உணவகங்களுக்கு போவது என ஜாலியாக போகிறார். இதற்காக வாடிக்கையாளரிடம் இருந்து பணமும் பெற்றுக்கொள்கிறார். கேட்பதற்கு நூதனமாக இருக்கலாம், ஆனால் இப்படித்தான் பணம் சம்பாதிக்கிறார் ஷோஜி.
5600 ரூபாய்
அதுவும் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 5600 ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் பிசினஸ் எப்படி போகிறது என்பதை பாருங்க. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 4000 முறை இதுபோல சேவை வழங்கியுள்ளதாக ஷோஜி மொரிமோட்டோ கூறுகிறார்.
ஷோஜியை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானவர்கள் பின் தொடருகின்றனர். இவர்கள்தான் ஷோஜிக்கு வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் வருகின்றனர். அதில் குறிப்பிட்ட ஒருவர் மட்டும் ஷோஜியை 270 முறை வாடகைக்கு அழைத்துச் சென்றுள்ளார். தினம் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்கிறார் ஷோஜி.
மேலும் படிக்க...
Share your comments