ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 8,500 அப்ரெண்டீஸ் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் எஸ்பிஐ இணையதளத்தில் ஆன்லைனில் கிடைக்கின்றன, விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்வேண்டும். காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
-
நிறுவனம்: State Bank of India
-
பணி: Apprentice
-
பணி காலம் : 3 ஆண்டுகள்
-
மொத்த காலிப்பணியிடங்கள்: 8,500
-
தமிழ்நாடு காலியிங்கள்: 470
-
வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
-
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000 வழங்கப்படும்
-
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
-
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
-
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020
-
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை: https://nsdcindia.org/apprenticeship அல்லது https://apprenticeshipindia.org அல்லது http://bfsissc.com அல்லது https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/ போன்ற ஏதாவதொரு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
அப்ரெண்டீஸ் காலிப்பணியிடங்கள் குறித்து முழு விவரம் அறிய
Click here
மேலும் விவரங்களுக்கு 022-22820427 - என்ற எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.
மேலும் படிக்க..
நாளொன்றுக்கு 4 மணிநேரம் வேலை... மாதத்திற்கு ரூ.70,000 சம்பளம்! சம்பாதிக்க ரெடியா?
வேளாண் கள அலுவலர் பணியிடங்கள் காலி! படிப்பு, தகுதி, சம்பளம் முழுவிவரம் உள்ளே
Share your comments