நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் தங்க வைப்புத் திட்டம் (Gold Deposit Scheme). இந்த திட்டத்தை வங்கி ஒரு புதிய அவதாரத்தில் (R-GDS) அறிமுகம் செய்துள்ளது. இது நிலையான தங்க வைப்புத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் தாங்கள் வைத்துள்ள தங்கத்தை (Gold) மட்டுமே டெபாசிட் செய்தால் போதும். அந்த தங்கத்திற்கு பதிலாக வங்கி அதிக வட்டி அளிக்கிறது. இதில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
இரட்டை நன்மைகள்
SBI-யின் தங்க வைப்புத் திட்டத்தில் இரட்டை நன்மைகள் உள்ளன. முதலில், உங்கள் தங்கத்தை வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது வங்கியின் பொறுப்பாக இருக்கும். அதே நேரத்தில், அதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கவும் முடியும். பொதுவாக, வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கம் வங்கிகளில் அப்படியே இருப்பதாக நினைகிறார்கள். ஆனால், இந்த திட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட தங்கத்தின் மூலம் வருவாயும் ஈட்டலாம். இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மூன்று வழிகளில் முதலீடு
இந்திய ஸ்டேட் வங்கியின் புதுப்பிக்கப்பட்ட தங்க வைப்புத் திட்டம் (R-GDS) மூலம் தங்கத்தைக் கொண்டு வருவாய் ஈட்ட வழி கிடைக்கிறது. வங்கியில் வைக்கும் தங்கத்திற்கு வட்டி கிடைக்கும். இருப்பினும், இந்த திட்டத்திற்கும் சில நிபந்தனைகள் உள்ளன. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, வாடிக்கையாளர் வங்கியில் குறைந்தது 30 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்ய வேண்டும். தங்கத்தை டெபாசிட் செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை.
லாக் இன் காலம்
எஸ்பிஐயின் தங்க வைப்புத் திட்டத்தின் கீழ் 3 வகையான ஆப்ஷன்கள் உள்ளன. குறுகிய கால வங்கி வைப்பு, நடுத்தர கால அரசு வைப்பு மற்றும் நீண்ட கால அரசு வைப்பு. குறுகிய கால வங்கி வைப்புகளில், தங்கம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை வைக்கப்படும். நடுத்தர கால அரசு வைப்புத்தொகையில், 5 முதல் 7 ஆண்டுகள் வரை வைப்பு செய்யப்படுகிறது. நீண்ட கால அரசு வைப்புத்தொகையில் தங்கம் 12 முதல் 15 ஆண்டுகளுக்கு வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது.
வட்டி
குறுகிய கால வங்கி வைப்புத்தொகையில், 1 முதல் 2 வருடங்களுக்கு 0.55 சதவிகிதம் வட்டி (Interest) கிடைக்கும். 2 முதல் 3 வருடங்களுக்கு முதலீடு செய்தால் 0.60 சதவிகிதம் வட்டி கிடைக்கும். நடுத்தர காலத்தில், தங்கத்தின் மீது 2.25 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். நீண்ட கால அரசு வைப்பில் தங்கத்தை வைத்திருப்பதற்கு 2.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
முழு செயல்முறை
நீங்கள் எஸ்பிஐயின் எந்தவொரு அருகிலுள்ள கிளையிலும் தங்கத்தை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ், தங்கத்துடன், வாடிக்கையாளர்கள் தங்கள் KYC யை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு, நீங்கள் எஸ்பிஐ வலைத்தளமான https://www.sbi.co.in/portal/web/personal-banking/revamped-gold-deposit-scheme-r-gds ஐப் பார்வையிடலாம்.
மேலும் படிக்க
SBI Mega E-Auction: குறைந்த விலையில் வீடு வாங்க வாய்ப்பு
வேலை வாய்ப்பளிக்கும் திறன் தாக்கப் பத்திரம்: இந்தியாவில் அறிமுகம்!
Share your comments