எஸ்.பி.ஐ., வங்கி, அதன் வீட்டுக்கடனுக்கான வட்டியில், 0.30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக, அறிவித்துள்ளது. மேலும், வீட்டுக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணத்தையும், 100 சதவீதம் தள்ளுபடி (100% discount) செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வட்டியை குறைத்தது
வீட்டுக் கடனுக்கான வட்டியில், 0.30 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபாய் வரையிலான புதிய வீட்டுக்கடனுக்கான (House loan) வட்டி, 6.80 சதவீதமாகும். 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடனுக்கு, வட்டி, 6.95 சதவீதமாக இருக்கும். மேலும், வீட்டுக் கடன் பெறும் மகளிருக்கு, வட்டியில், 0.05 சதவீதம் சலுகையும் வழங்கப்படும். நாட்டில் உள்ள எட்டு மிகப் பெரிய நகரங்களில், 5 கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டியிலும், 0.30 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
யோனோ செயலி மூலம் கடன்:
வங்கியின், ‘யோனோ’ செயலி (Yono App) மூலமாக வீட்டுக்கடன் கோருபவர்களுக்கு கூடுதலாக, 0.05 சதவீத வட்டி சலுகை கிடைக்கும். தகுதிவாய்ந்த, ஏற்கனவே வீட்டுக்கடன் பெற்றவர்களும், ‘யோனோ’ செயலி மூலம் கடனை, அதிகரித்துக்கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்கான வட்டியை SBI வங்கி குறைத்துள்ளதை அடுத்து, பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஆன்லைனில் டிஜிட்டல் அக்கௌன்ட்! SBI வங்கியின் புதிய திட்டம்!
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு!
Share your comments