தனக்குத் தானே கல்லறை கட்டி வசித்த மூதாட்டி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது விருப்பப்படி, அவர் ஆசைஆசையாகக் கட்டியக் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
மரணம் என்பது எப்போது வரும் என்பது நம் யாருக்கும் தெரியாது. அவ்வாறு வரும்நேரத்தில் நாம் உலக பந்தங்களில் இருந்து விடைபெறுவது தவிர்க்கமுடியாதது.ஆனால், தமக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில் வாழும் பலரும், தமது மரணம் பற்றிச் சிந்திப்பதில்லை.
ஆசைப்படி கல்லறை
ஆனால், தனது மரணத்திற்குப் பிறகு துயில் கொள்வதற்காக, கல்லறையைக் கட்டி வைக்கும் ஆசை மூதாட்டி ஒருவருக்கு வந்துள்ளது. அவர் தனது ஆசைப்படி கல்லறையும் கட்டி வைத்திருந்தால் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான்.
நாகர்கோவிலில், கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி. 70 வயதான இந்த மூதாட்டி, திருமணம் செய்துகொள்ளாமல், பல்லுகுழி பகுதியில் தனியாகவே வசித்து வந்தார். 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் சென்று வந்த இவரை, உறவினர் விஜயன் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.
மூதாட்டி மரணம்
இந்த நிலையில் ரோசி வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து அவரது வீட்டருகே வசிப்பவர்கள் விஜயனுக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து விஜயன் அங்கு சென்று பார்த்த போது ரோசி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். கடந்த 12-ந் தேதி தனது மனைவியோடு நலம் விசாரிக்க வந்தபோது ரோசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறியதாகவும் விஜயன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இறந்து போன ரோசி, தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, கடந்த 2016-ம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார் என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது. கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரது ஆசைக்கு இணங்க அந்தக் கல்லறையில் மூதாட்டியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க...
ரேசன் கடை ஊழியர்களுக்கு 14%அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் யூரியாத் தட்டுப்பாடு- குறுவை சாகுபடியில் சிக்கல்!
Share your comments