மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டில் புதிய முயற்சியாக அழுவதற்கெனத் தனி அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அழுகை அறை (Crying room)
அழுகை அறைக்கு வரவேற்கிறோம்' என்று வினோதமான வாசகத்துடன் வரவேற்கிறது ஸ்பெயினின் மாட்ரிக் நகரில் அமைந்துள்ள அழுகை அறை.
குறிப்பாக மன நலம் பாதிக்கப்படும் நபர் வாய் விட்டு அழுவதன் மூலம் பாதி குணம் அடையமுடியும். இதன் அடிப்படையிலேயே ஸ்பெயின் நாட்டில் அழுகை அறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்கொலைத் தடுப்பு சேவை (Suicide Prevention Service)
கடந்த வாரத்தில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், மனநல பராமரிப்பு இயக்கத்தை அறிவித்தார். இதற்காக 100 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேர தற்கொலை தடுப்பு உதவி சேவை, அழுகை அறை போன்ற சேவைகளும் அடங்கும்.
மனநலப் பிரச்சினையால் நடக்கும் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் இந்த புதிய அறை உருவாக்கப்பட்டுள்ளது.கவலைகள் தீரும் வகையில் மனம் திறந்து அழுவதற்காக இந்த அழுகை அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் ஒரு மூலையில் தொலைபேசிகள் உள்ளன, அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியும் ஆறுதல் பெறும் வகையில் இந்த அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
5.8 % பேர் (5.8%)
புள்ளிவிபரங்களின்படி, 10 இளைஞர்களில் ஒருவர் மனநல பிரச்சினையுடன் இருப்பதாகவும், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 5.8 சதவீதம் பேர் கவலையால் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments