![Free poultry farming workshop](https://kjtamil.b-cdn.net/media/5534/backyard-hen.jpg?format=webp)
பெரம்பலூரில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
பெரம்பலூர்- செங்குணம் பிரிவு சாலை எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. சிறப்பம்சமாக நாட்டுக்கோழி இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, வளர்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, கோழிக்குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி முகாமில் விவசாயிகள், கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள், சுயதொழில் செய்ய விரும்புவோர் என அனைவரும் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் காலை 10 மணிக்கு மேல் 5 மணிக்குள் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தங்களின் வரவை பதிவு செய்ய வேண்டும். தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் 93853 07022 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்நடை மருத்துவப்பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
Share your comments