நாம் முதலீடு செய்வதே, அதிக வட்டி விகிதத்தில் அதிக வருமானம் வரும் வேண்டும் என்பதற்காகத் தான். நீங்களும் அதிக வட்டி வருமானம் (High Interest income) வேண்டும் என விரும்பினால், அதற்கான எஸ்பிஐ முதலீட்டு திட்டம் (SBI Investment Scheme) ஒன்று உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது.
திட்டத்தின் பெயர்
கடந்த 5 ஆண்டுகளில் 22 சதவீத வருமானத்தை வழங்கிய எஸ்பிஐ திட்டத்தின் பெயர் எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் (SBI Small Cap Fund) -நேரடி திட்டம். இந்த நேரடி திட்டத்தின் விவரங்கள் முதலீட்டின் தரத்தில், நான்கு நட்சத்திர மதிப்பிடப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 22.23 சதவீதத்தை வழங்கியுள்ளது.
வருடாந்திர வைப்புத் திட்டம்
எஸ்பிஐயின் இந்த திட்டத்தில் 36, 60, 84 அல்லது 120 மாத காலத்திற்கு முதலீடு (Investment) செய்யலாம். இதில், முதலீட்டின் வட்டி விகிதம் டெர்ம் டெபாஸிட்களுக்கு பொருந்தும். உதாரணமாக, நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், ஐந்து வருட நிலையான வைப்புத்தொகைக்கு (FD) பொருந்தும் வட்டி விகிதத்தின் படி வட்டி கிடைக்கும்.
தகுதிகள்:
மைனர் உட்பட வங்கி இருக்கும் பகுதியில் குடியிருக்கும் நபர்கள் எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டத்தைத் திறக்கலாம். இதை தனியான கணக்காக அல்லது கூட்டு கணக்காக (Joint Account) திறக்கலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இனி மின்கட்டணத்திலும் சேமிக்கலாம்! முன்கூட்டியே மின்கட்டணம் கட்டினால் வட்டி வழங்கப்படும்!
சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்! முதலீட்டு மானியம் 3 மடங்காக அதிகரிப்பு!
Share your comments