1. Blogs

மரத்தை திருமணம் செய்து கொண்ட விநோத பெண்!

R. Balakrishnan
R. Balakrishnan
Girl who married the tree

37 வயதான கேட் கன்னிங்ஹாம் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மெர்சிசைடில் உள்ள செஃப்டனில் எல்டர் என்ற மரத்தை (Tree) திருமணம் செய்த பிறகு தனது இரண்டாவது பெயரான குடும்பப் பெயரை எல்டர் என்று மாற்றிக்கொண்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் அவர், வாரத்திற்கு ஐந்து முறை எல்டர் மரத்தை பார்த்துவிட்டு செல்வதாக கூறியுள்ளார். மேலும் அந்த நாட்டில் கொண்டாடப்படும் குத்துச்சண்டை தினத்தன்று தனது மரத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

மரத்தோடு திருமணம் (Married the Tree)

கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இவர் உண்மையில் ஒரு இயற்கை ஆர்வலர் ஆவார். இவர் ரிம்ரோஸ் பள்ளத்தாக்கு கன்ட்ரி பார்க் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மரத்தை திருமணம் செய்து கொண்டார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மரங்களை திருமணம் செய்த மெக்சிகன் பெண்களால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே இந்த முடிவினை அவர் எடுத்தார். சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் மற்றும் காட்டை அழித்தல் போன்ற செயல்களுக்கு எதிராக இந்த முடிவினை அவர் எடுத்ததாக கூறினார்.

எல்டர் மரம்

ரிம்ரோஸ் பள்ளத்தாக்கு கன்ட்ரி பூங்காவிற்குச் சென்று தான் திருமணம் செய்யப்போகும் மரத்தை அவர் கண்டறிந்துள்ளார். அப்போது தான் எல்டர் மரத்தை பார்த்துள்ளார் அதன் வெளிர் பட்டை நிறமும் பெரிய அளவும் அவரை கவர்ந்தன.

மேலும் அந்த மரம் தன்னை நிறைவு செய்கிறது என்று கூறியுள்ளார். உண்மையில், மரப்பட்டையால் மூடப்பட்ட காதலன் மீதான காதல் இருவரின் திருமணத்தில் சென்று முடிந்தது. மேலும் இந்த உறவு தனது வாழ்க்கையை சிறப்பாக மாற்றியுள்ளது என்று கேட் கூறியுள்ளார். தற்போது இந்த ஜோடி இந்த ஆண்டு தங்களது மூன்றாவது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராக உள்ளனர். கேட் இந்த திருவிழாவிற்காக மரத்தை மாலை, டின்சல் மற்றும் பாபிள்களால் போன்றவற்றால் அலங்கரித்துள்ளார்.

மேலும் படிக்க

முதன் முதலாக சூரியனை தொட்டது அமெரிக்க விண்கலம்!

குளிரில் நடுங்கும் குட்டியானைகள்: போர்வை போர்த்தி பராமரிப்பு!

English Summary: Strange girl who married the tree! Published on: 23 December 2021, 10:27 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.