பட்ஜெட் 2021ல் பல தரப்பினரும் வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்தனர். எனினும் வருமான வரியை பொறுத்தமட்டில் மாற்றமில்லை. எனினும் இந்த பட்ஜெட் (Budjet) வீடு வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பினை கொடுத்துள்ளது எனலாம். ஏனெனில் வீடு வாங்குவோருக்கு சில சலுகைகள் (Offers) இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த பட்ஜெட் கொரோனா (Corona) தொற்றுக்கு மத்தியில் வந்துள்ளதால், மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.
வீட்டுக் கடன்
பல சலுகைகள் குறிப்பாக இந்த காலகட்டத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி (Home loan interest) விகிதமும் குறைவாக உள்ளது. இதே மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக உள்ளிட்ட சில மாநிலங்களில் முத்திரைத்தாள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஆக இப்படி பல சலுகைகளுக்கும் மத்தியில், இந்த பட்ஜெட் கூடுதலாக வரி சலுகையும் (Tax concession) கொடுத்துள்ளது. ஆக மொத்தத்தில் நடப்பு ஆண்டில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல சான்ஸ் தான். வரி சலுகை மேலும் குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கு வழங்கப்படும் வரி சலுகைகள், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் (Nirmala Seetharaman) அறிவித்துள்ளார். இதன் படி, குறைந்த விலையில் வீடு வாங்குவோர் வீட்டுக்கடன் வட்டிக்கு, ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகைகளை பெறலாம். சலுகைகளை விதிமுறைகள் வருமான வரிசட்டம் 80சி (Income Tax Act 80 c) பிரிவின் கீழ் இந்த சலுகையை பெற முடியும்.
வரி சலுகை நீட்டிப்பு:
கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது தற்போது வரையில் நீட்டித்துள்ளது. எனினும் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் வீட்டுக் கடன் (Home loan) பெற்றிருக்க வேண்டும். வீட்டின் முத்திரைதாள் வரி மதிப்பு 45 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது. கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு சொந்தமாக வீடு இருக்கக்கூடாது, உள்ளிட்ட பல விதிமுறைகளும் (Rules) உள்ளன. வீட்டுக்கனவு நனவாக வழிவகுக்கும் இந்த வரி சலுகையினை மார்ச் 31, 2022 வரை பெறலாம். மொத்தத்தில் நடப்பு ஆண்டு வீடு வாங்க சரியான நேரம் தான். பல சலுகைக்கு மத்தியில் மலிவு விலையில் வீடு வாங்க இது வழிவகுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக பலரின் வீட்டுக் கனவை நனவாக்க இது, சாதகமாக அமையும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மத்திய பட்ஜெட் 2021 - முக்கிய அம்சங்கள் என்னென்ன?
மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன்! தமிழகத்தில் கடற்பாசி பூங்கா!
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட்! பிரதமர் மோடி புகழாரம்!
Share your comments