நாடு நாடாக சுற்றிப்பார்க்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த செய்தி. தங்கள் நாட்டை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 13,600 வழங்குகிறது அந்நாட்டின் அரசு. அது எந்த நாடு? அந்த நாட்டில் சுற்றிப்பார்க்க உள்ள இடங்கள் என்ன என்பதை இங்கே காண்போம்.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் பெரிதும் அடிவாங்கிய துறை என்றால் அது சுற்றுலாத்துறை தான். சுற்றுலாத்துறையினை மட்டுமே நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறையத்தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் புத்தூயிர் பெற்றுள்ளது சுற்றுலாத்தலங்கள். இதனிடையே தான் உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தைவான் நாடு ஒரு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தங்கள் நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தலா $165 வழங்கத் திட்டமிட்டுள்ளது. தைவான் தீவிற்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு $165 வழங்குவது போல, சுற்றுலா குழுவுக்கும் $658 வரை வழங்க திட்டமிட்டுள்ளது. இதுக்குறித்து தகவல் வெளியிட்டுள்ள அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் வாங் குவோ-ட்சை, இந்த பணமானது சுற்றுலாப் பயணிகள் தைவானில் தங்குமிடம் உட்பட தங்களது செலவுகளை ஈடுகட்ட இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த பண உதவித்தொகையானது டிஜிட்டல் முறையில் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சீன குடியரசு (Republic of china) என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படும் தைவானுக்குச் செல்வதற்கு முன்கூட்டியே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்குவதற்கான விருப்பம், பயணம், சுற்று-பயண விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள், வங்கி அறிக்கைகள் மற்றும் அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காட்ட வேண்டும். இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா குழுவுடன் பயணம் செய்தால், இந்தியர்கள் இ-விசாவிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இது பொதுவாக தைவானிய அரசு நிறுவனங்கள் அல்லது சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் அல்லது செயல்பாடுகளில் கலந்துகொள்ளும் நபர்களை உள்ளடக்கியது.
கூடுதலாக, கனடா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஷெங்கன் நாடுகள், அமெரிக்கா அல்லது இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து செல்லுபடியாகும் நிரந்தர குடியுரிமை அட்டைகள் அல்லது விசாக்களுடன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும் தைவானுக்கு இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
தைவானில் பார்க்க சிறந்த இடங்கள்
யுஷன் தேசிய பூங்கா:
தைவானில் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் முதன்மையானது யுஷன் தேசிய பூங்கா தான். இயற்கை அழகியலின் உச்சமாக விளங்கும் இந்த இடத்தில் மலையேற்றம் உட்பட மற்ற விளையாட்டு பொழுதுப் போக்குகளும் நிறைந்துள்ளன. பூங்காவில் 3,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான சிகரங்கள் உள்ளன. மேலும் இந்த பூங்காவில் நாட்டின் மிக உயரமான மலை ஒன்று உள்ளது. ஜேட் மலை 3,952 மீட்டர் உயரம் கொண்டது, இது உலகின் நான்காவது பெரிய தீவு மலையாகும்.
தேசிய அரண்மனை அருங்காட்சியகம்:
சீன ஏகாதிபத்திய கலைப்பொருட்களின் மிகப்பெரிய சேகரிப்புகளில் ஒன்றான தேசிய அரண்மனை அருங்காட்சியகம் ஏகாதிபத்திய சீனாவின் கடந்த கால தோற்றத்தினை பிரதிபலிக்கக்கூடியது.
சன் மூன் ஏரி:
தைபே நகரத்திலிருந்து சுமார் இரண்டு மணிநேரம் தொலைவில் அமைந்துள்ள சன் மூன் ஏரி, தைவானின் நான்டோவில் பார்க்க வேண்டிய மிக அழகான இடங்களில் ஒன்றாகும். ஏரியைச் சுற்றி ஒரு பூங்கா, அழகான காடுகள் மற்றும் பழைய ஆயுதங்கள் மற்றும் கைவினைப்பொருட்களின் கண்காட்சிகள் உள்ளன. ஏரியைச் சுற்றி ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் உள்ளன. படகு சவாரி, தனித்துவமான கேபிள் கார் சவாரி மூலம் ஏரியின் அழகினை காணலாம்.
சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில், $165 வழங்கும் தைவான் அரசின் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தைவானிற்கு நிறைய சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க:
குப்பையை கொடு.. தங்கத்தை வாங்கிக்கோ- கிராமத்தை சுத்தப்படுத்த வழக்கறிஞர் புதிய உத்தி
யாரு சாமி இவரு? 20 நிமிடத்தில் 25 மாடி கட்டிடத்தை ஏறி சாதித்த குரங்கு மனிதன்
Share your comments