தமிழக அரசின் மகளிர் சார்ந்த துறைகளில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் சமுதாயத்திற்கு, ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் பெண்கள் தாராளமாக முன்வந்து விண்ணப்பிக்கலாம்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர்(பெண்கள் மட்டும்) பதவிகளுக்கு காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்
11
தகுதி (Educational Qualification)
பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் ஹோம் சயின்ஸ் அல்லது சைக்காலஜியில் முதுகலை பட்டம், சமூகவியல், குழந்தை வளர்ச்சி, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணியியல், மறுவாழ்வு அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ.56,100 -ரூ.2,05,700
வயதுவரம்பு: (Age limit)
01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும்.
கட்டணம்: (Fee)
நிரந்த பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை(Selection process)
கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
TNPSCயின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு தேதி (Exam date)
05.11.2022
விண்ணப்பிக்கக் கடைசி தேதி(Last date):
16.08.2022
மேலும் படிக்க...
சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments