திருமணம் என்றால் விதவிதமான விருந்துகள் இருக்கும். இந்தக் கல்யாணத்திலும் விதவிதமான விருந்துகள் இருந்தன. ஆனால், திருமணத்திற்கு வருகை வந்த விருந்தினர்களுக்கு அதிர்ச்சியையும், கோபயத்தையும் ஏற்படுத்திய விருந்துகள் அவை.
வித்தியாசமான திருமணம் (Strange marriage)
வாழ்வில் ஒரு முறை நடக்கும் திருமணத்தைச் சற்று வித்தியாசமாக, உறவினர்கள் வியக்கும் விதத்தில், பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என எண்ணுவர்.
தாராள மனம் கொண்டவர்கள், பரிசுப்பொருட்கள் ஏற்கப்படாது என அறிவித்து, உறவினர்களையும், நண்பர்களையும், பரிசு அளிக்கும் பழக்கத்தில் இருந்து விடுதலை செய்வர்.
ஆனால் சமீபத்தில் நடந்த திருமண விழா, தங்கள் அழைப்பை ஏற்று வந்திருந்த விருந்தினரை, முகம்சுழிக்க வைத்தது மட்டுமல்லாமல், டென்ஷனுடன் வீடு திரும்ப வைத்தது.
என்ன செய்தார்கள் தெரியுமா? (Do you know what they did?)
திருமணத்தில் முக்கியமானது விருந்து, வந்தவர்களை நன்றாக உபசரித்து அவர்களின் வயிற்றை நிறைத்து அனுப்புவது தான் வழக்கம். ஆனால் விருந்தினர்கள் தரும் கிப்ட்களுக்கு ஏற்ப அவர்களுக்கு விருந்து கொடுப்பதை கேள்விப்பட்டுள்ளீர்களா?
இப்படியாக சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் விருந்தினர்கள் கொண்டுவரும் கிப்ட்களின் மதிப்பிற்கு ஏற்ப விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன் படி விருந்தினர்கள் திருமண அரங்கிற்குள் வரும் போது அவர்களுக்கு ஒரு சீட்டு வழங்கப்படும் அதில் அவர்கள் திருமண ஜோடிகளுக்கு வழங்குவதற்காகக் கொண்டு வந்திருக்கும் பரிசின் மதிப்பு குறித்து குறிப்பிட வேண்டும்.
டென்ஷனான விருந்தினர்கள் (Tense guests)
அவர்கள் குறிப்பிடும் மதிப்பிற்கு ஏற்ப அவர்களுக்கு விருந்து வழங்கப்படும். குறிப்பாகக் குறைவான மதிப்பிலான கிப்ட் வழங்குபவர்களுக்கு குறைவான மதிப்பிலான விருந்தும், தங்கம், வெள்ளி, வைரம் ஆகிய கிஃப்ட் வழங்குபவர்களுக்கு ராஜ விருந்தும் வழங்கப்பட்டன. இதனால் வந்திருந்த விருந்தினர் டென்ஷனுடன் வீடு திரும்ப நேர்ந்தது.
மேலும் படிக்க...
தினம் வெறும் ₹74 சேமிப்பு- கோடீஸ்வரராக ஓய்வு - அசத்தல் திட்டம்!
ரூ.7,000 கல்வி உதவித்தொகை -விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
Share your comments