யானை வரும் பின்னே, மணி வரும் முன்னே என்பார்கள். இங்கு யானைகள் கூட்டமாக வந்து, ஒருவரைச் சூழ்ந்து கொண்டால் எப்படி இருக்கும்.
அப்படியொரு சம்பவம்தான் இங்கு நடந்தது.
பொதுவாக காட்டு பகுதியில் யானைகளை பார்த்தால் அனைவரும் தலைதெறிக்க ஓடுவார்கள். யானைகளிடம் சிக்கி பலர் உயிரையும் இழந்து இருக்கிறார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக எங்களுக்கும் மனிதர்கள் மேல் பாசத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
பரிட்சயமான குரல்
அந்த குரலைக் கேட்டதும் அதிர்ச்சி... தங்களுக்கு மிகவும் பரிட்சையமான ஓசை அது. அவ்வளவுதான் யானைகளுக்கு இது தங்களுக்கு பழக்கமான வளர்ப்பவரின் குரலுக்கு சொந்தமானது என கண்டுபிடித்தன. உடனே 4 யானைகளும் பாகனை நோக்கி திபுதிபுவென பிளிறியபடி ஓடோடி வந்தன.
யானை பாகன் ஒருவர் பல யானைகளை வளர்த்தார். அவர் வனப்பகுதிக்கு செல்கிறார். சற்று தூரத்தில் 4 யானைகள் நின்று கொண்டு இருக்கிறன. அந்த யானைகளை பார்த்த பாகன் தள்ளி நின்று அதனை நோக்கி குரல் எழுப்பினார். இந்த சத்தத்தை கேட்டதும் அவ்வளவுதான் அந்த யானைகளுக்கு இது தங்களுக்கு பழக்கமான வளர்ப்பவரின் குரலுக்கு சொந்தமானது என கண்டுபிடித்தது.
சூழ்ந்துகொண்ட யானைகள்
உடனே அந்த 4 யானைகளும் அவரை நோக்கி திபுதிபுவென பிளிறியபடி ஓடோடி வந்தது. அருகில் வந்ததும் பாகனை சுற்றி வளைத்து துதிக்கையை அவர் மேல் போட்டி போட்டுக்கொண்டு, தனது பாசத்தை வெளிப்படுத்தின.
இதை பார்த்து நெகிழ்ந்து போன பாகன் தான் வளர்த்த யானைகளை கட்டி அணைத்துக்கொண்டார். அந்த யானைகளும் எதையும் காட்டாமல் அவரை சிறிது நேரம் சுற்றி சுற்றி வந்தன.
பளிச்சிட்டப் பாசம்
இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது வெளியான சில நிமிடங்களில் லட்சக்கணக்கானோர் இந்த பாச காட்சியை பார்த்து நெகிழ்ந்து போனார்கள். தாயுள்ளத்துடன் பராமரிக்கும் ஒருவருக்கு இந்தவகையில் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி, அவரை மெய் சிலிர்க்க வைத்திருக்கின்றன யானைகள்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments