1. Blogs

இந்த 6 passport வெப்சைட் பக்கம் போகாதீங்க- எல்லாம் போலி..

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
The government has listed 6 fake passport service websites

பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதாகக் கூறும் போலி இணையதளங்கள் மற்றும் செயலிகள் ஆகியவற்றின் விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. தகவல்களை திருடுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள இந்த போலி இணையதளங்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு நாட்டின் குடிமகன் என்பதற்கு அடையாளமாக விளங்குபவற்றில் முதன்மையானது கடவுச்சீட்டு என்னும் பாஸ்போர்ட். இதனை பெற இந்திய அரசின் சார்பில் பிரத்யேக இணையதளம் ஒன்று இயங்கி வருகிறது. அதன்மூலம் விண்ணப்பித்து நாம் பாஸ்போர்ட் பெறலாம். இந்நிலையில் சமீப காலமாக பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதாக போலி இணையதளம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மோசடியான இணையதளங்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் விண்ணப்பதாரர்களிடமிருந்து தரவுகளை சேகரிப்பதுடன், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கும், பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்கான சந்திப்புகளை திட்டமிடுவதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதனையொட்டி 6 இணையதளங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவித்துள்ள அமைச்சகம், இந்திய பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பினை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம் எது?

இந்திய அரசின் சார்பில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான ஒரே பிரத்யேக இணையதளம் -- www.passportindia.gov.in என்பது மட்டுமே. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் கிடைக்கும் ஒரே இணையதளம் இது மட்டும் தான் என்று அமைச்சகம் தனது இணையதளத்தில் தெளிவாகக் கூறுகிறது.

நாடு முழுவதும் உள்ள 36 பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 190 இந்திய தூதரகங்கள் மூலம் இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பான சேவையினை வழங்கி வருகிறது. சரி, அரசு எச்சரித்த இணையதளங்கள் எது என்பதை கீழே காணலாம்.

போலி இணையதளம்: www.indiapassport.org

இந்த இணையதளத்தைத் திறக்கும் போது, "கணக்கு இடைநிறுத்தப்பட்டது’ (Account Suspended) எனக்காட்டும். ஆனால் இது போன்ற பிற டொமைன்களுடன் இவற்றில் தோன்ற வாய்ப்புகள் உள்ளன.

போலி இணையதளம்: www.online-passportindia.com

இது வாக்காளர் அட்டை உட்பட ஆன்லைனில் விண்ணப்பிக்க பல ஆவணங்களை கோருகிறது. இது பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் முக்கியமான தகவல்களைத் திருடுவதை நோக்கமாகக் கொண்ட போலி இணையதளம்.

போலி இணையதளம்: www.passportindiaportal.in

இந்த இணையத்தின் முகப்புப் பக்கத்தில் இந்த சேவைகளை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது: "பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" மற்றும் "பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவம்".

போலி இணையதளம்: www.passport-india.in

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலி இணையதளம்: www.passport-seva.in

'passport-seva.in' என்ற url ஆக உள்ள இந்த இணையதளமும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. '.in' டொமைனுடன் இது இந்திய அரசாங்கத்தின் பாஸ்போர்ட் இணையத்தளம் போல் காட்சியளிப்பதால் பலர் ஏமாறுகின்றனர்.

போலி இணையதளம்: www.applypassport.org

பட்டியலில் உள்ள இரண்டாவது '.org' இணையதளம், www.applypassport.org என்பது இந்திய அரசாங்கம் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களை எச்சரித்த மற்றொரு போலி பாஸ்போர்ட் இணையதளமாகும். எனவே மேற்குறிப்பிட்ட இணையதளங்களை பொதுமக்கள் தவிர்க்கவும்.

மேலும் காண்க:

10 புதிய அறிவிப்புகள்- மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர்

விண்ணப்பிக்க கடைசி 3 நாள்- அஞ்சல் துறையில் 30041 காலிப்பணியிடம்

English Summary: The government has listed 6 fake passport service websites Published on: 19 August 2023, 04:26 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.