தாம் ஒதுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டிய நரிக்குறவப் பெண்ணுடன் கோயிலின் அன்னதானப் பந்தியில் அமைச்சர் சேகர்பாபு சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.
கோயில்களில் அன்னதானம்
தமிழகம் முழுவதும், அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் தமிழக அரசின் சார்பில் நாள்தோறும் நூறுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் என்பது அனைவருக்கும் சமமானது. ஏழை, பணக்காரன், கீழ் ஜாதி, மேல் ஜாதி என்ற எந்தப் பாகுபாடும் பார்க்காமல், அனைவரையும் ஒன்றாக அமரவைத்து உணவு பரிமாறுவது
குற்றச்சாட்டு (Indictment)
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னதானத்தில் சாப்பிடச் சென்றத் தன்னை முதல் பந்தியில் அமரக்கூடாது என்று சிலர் தடுத்துத் திருப்பி அனுப்பி விட்டனர் என நரிக்குறவப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். சமூகவலைதளங்களில் வீடியோவாக அவர் பதிவேற்றிய வீடியோ வைரல் ஆனது.
இதனையடுத்து, மாமல்லபுரம் அருகே உள்ள பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கும்பாபிஷேக பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
முதல் பந்தியில்
பின்பு சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டிய பெண்ணை அழைத்து வந்து, அவருடன் முதல் வரிசையில் அமர்ந்து தானும் அமர்ந்து அன்னதானத்தில் மதிய உணவை சாப்பிட்டார் சேகர்பாபு. இதன்மூலம் அவர், தமிழக அரசியல் வரலாற்றில் புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளார்.
பின்பு நரிக்குறவ மக்கள் மற்றும் பொது மக்களுக்கு கோயில் வளாகத்தில் வேட்டி சேலைகளை வழங்கினார் அமைச்சர்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, நரிக்குறவ பெண் வெளியிட்ட வீடியோ அரசின் கவனத்திற்கு வந்தது. பின்பு இது முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே அந்தப் பெண்ணுடன் இன்று அமர்ந்து கோயில் வளாகத்தில் உணவு அருந்தினேன் என்று கூறினார்.
சமூக வலைதளத்தால் பயன்
முன்பெல்லாம் அவமதிப்பு நடந்தால், அதனைத் தட்டிக்கேட்டாலும் நியாயம் கேட்டாலும் பலனில்லை. குறிப்பாக அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு குற்றச்சாட்டைக் கொண்டு செல்வது என்பதே மிகவும் கடினம். தற்போது சமூக வலைதளங்கள் இருப்பதால், மற்றவர்கள் கவனத்தை மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் கவனத்தையும் நம்பக்கம் திருப்ப முடிகிறது.
மேலும் படிக்க...
Share your comments