எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான (Electric Scooter) தேவை அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப அரசுகளும் மானியம், உதவித் தொகை போன்றவற்றை வழங்கி வருகிறது.
மானியத் தொகை
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை (Subsidy) மத்திய அரசு அண்மையில் உயர்த்தியது. இதுபோக, குஜராத் அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்தது. இதனால் பல எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை ஏறக்குறைய பாதியாக குறைந்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் அரசும் எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது. இதில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் மாநில ஜிஎஸ்டி (GST) தொகை திருப்பிச் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு 5,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். வாகனத்தின் பேட்டரி (Battery)அளவிற்கு ஏற்ப மானியத் தொகை வேறுபடும்.
மேலும் படிக்க
இளமையில் டீ விற்ற ரயில்வே வாட்நகர் இரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
மாஸ்க் பயன்பாடு 74% குறைவு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!
Share your comments