1. Blogs

சமூக ஊடகத்தில் Likes பெற விரும்பியக் காதலர்-காரின் மேல் காதலியைக் கட்டிச் சென்ற விநோதம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The weird thing about tying up a girlfriend on top of a car-loving boyfriend-car!
Credit : India Today

இன்ஸ்டாகிராம் எனப்படும் சமூக ஊடகங்களில் தன்னைப் பின்தொடருபவர்களை வியப்பில் ஆழ்த்துவதற்காக, காதலர் ஒருவர், தன் காதலியை காரின் மேல் பகுதியில் கட்டிச் செல்வது போன்று வெளியிட்ட வீடியோ, அவரை அபராதம் செலுத்த வைத்தது.

சமூக ஊடக மோகம் (Social media craze)

சமூக ஊடகங்களின் வாயிலாக, மற்றவர்களின் கவனத்தை ஈர்த்ததும், பலர் நம்மைப் பின்தொடர்பவர்களாக இருப்பதும் தற்போதைய கவுரமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த விஷயத்தில், இளைய தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில், ஆண், பெண் என எந்தப் பாகுபாடும் இல்லை.

சுயவிளம்பரம் (Self-promotion)

இருபாலருமே, சமூக ஊடகங்களின் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதையும், விளம்பரம் தேடிக்கொள்வதையுமே மிகவும் விரும்புகின்றனர். குறிப்பாக தன்னைப் பின்தொடர்பவர்களுக்காக எந்தச் சவாலையும் செய்யத் துணிந்து விடுகின்றனர்.

அந்தவகையில், ரஷியாவைச் சேர்ந்த செர்ஜி கோசென்கோ என்பவர் சமூக ஊடக பிரபலம். இவர், தனது காதலியுடன் இணைந்து பலவேறு வித்தியாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஸ்வாரஸ்மான வீடியோக்கள் (Interesting videos)

இந்த நபருடைய வீடியோக்கள் சற்று வித்தியாசமாக இருப்பதால், இவருக்கென ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்கள் (Followers)உள்ளனர். தன்னுடைய ஃபாலோயர்ஸ்களை மகிழ்விப்பதற்காக, இவர் சமீபத்தில் தனது காதலியுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


“Trust Test”

குறிப்பாக, சமூக வலைத்தளத்தில் கிட்டதட்ட அவருக்கு 50 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர். இந்த வீடியோவை “Trust Test” என்று குறிப்பிட்டுத் தன்னுடைய சமூக ஊடகத்தின் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அதில் தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிறு கொண்டு கட்டி வைத்து கொண்டு, சாலையில் மிக வேகமாக காரை ஓட்டி சென்று உள்ளார். இருவரும் கைகளில் விலங்கு மாட்டி உள்ளனர்.

கண்டனங்கள் (Condemnations)

இந்த வீடியோவானது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வியப்பில் உறைந்துபோன சிலர், பலவிதங்களில் தங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், இந்த வீடியோ, சிலரது கண்டனங்களையும் சந்தித்துள்ளது.

அபராதம் (Fine)

மேலும், இந்த வீடியோ அந்நாட்டின் போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இந்த வீடியோவைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த நபரை கண்டுபிடித்து, சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 760 அபராதம் விதித்தனர்.

தவறான முன் உதாரணம் (False precedent)

முக்கியமாக, அந்நாட்டின் சிறுவர் சிறுமிகளுக்கு இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும், அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க...

பிணவறை உதவியாளர் வேலை- விண்ணப்பித்த 100 இன்ஜினியர்கள்!

கொரோனா உயிரிழப்பு 21% அதிகரிப்பு: தடுப்பூசி ஒன்றே தீர்வு என WHO அறிவிப்பு!

English Summary: The weird thing about tying up a girlfriend on top of a car-loving boyfriend-car! Published on: 07 August 2021, 06:43 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.