அமெரிக்காவில் நிக்கோலே என்ற பெண் சர்வ சாதாரணமாக, சுவரைப் பெயர்த்துச் சாப்பிடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விநோதப் பழக்கம் (Bizarre habit)
அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் நிக்கோலே. இவருக்கு சிறு வயதில் சாக்பீஸ்,பல்பம் போன்ற பொருட்களைச் சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் வளர்ந்து தற்போது அவர் வீட்டின் சுவர்களையே பெயர்த்து சாப்பிட்டு வருகிறார். இவருடைய இந்தப் பழக்கம் ஒரு டிவி நிகழ்ச்சி மூலம் வெளியே தெரியவந்துள்ளது.
3 சதுர அடி (3 square feet
அவருக்கு அந்த சுவரின் மணம் மிகவும் என்பதால் இவர் தன் வீட்டில் உள்ள சுவரை அவ்வப்போது சாப்பிடுகிறார். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 3 சதுரடி சுவரையாவது சாப்பிட்டுவந்த அவர், தற்போது இந்த சுவரை சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகவே மாறிவிட்டார்.
சில நேரங்களில் வேறு வீட்டிற்கு சென்றாலும் அங்குள்ள சுவரை சாப்பிடும் பழக்கம் இருவருக்கு இருக்கிறதாம். இவரது தாயார் இறந்த போது துக்கத்தை மறக்கும் வகையில் தொடங்கிய இப்பழக்கத்தை தற்போது விடமுடியாமல் தவிக்கிறார் இந்தப் பெண்மணி.
5 ஆண்டுகள் (5 years)
5 ஆண்டுகளாக இப்படிச் சுவரைச் சாப்பிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுவற்றைப் பெயர்த்துச் சாப்பிட்டால், புற்றுநோய் ஏற்படும் என மருத்துவர்கள் தம்மை எச்சரித்தபோதிலும், தம்மால் விடமுடியவில்லை என்கிறார்.
காய்ந்த சுண்ணாம்பின் மணம் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு வாரத்திலேயே 3.2 சதுர அடிச் சுவரை சாப்பிட்டு விடுவதாகக் கூறப்படுகிறது.இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் படிக்க...
குற்றம்சாட்டிய நரிக்குறவப் பெண்ணுடன் ஒரே பந்தில் அன்னதானம் சாப்பிட்ட அமைச்சர்!
Share your comments