1. Blogs

உலகின் மிக நீளமான சொகுசு கார் மறுசீரமைப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
World's Longest Car

உலகின் மிக நீளமான அமெரிக்கன் டிரீம் காரை மறுசீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. அமெரிக்கன் டிரீம் கார் உலகின் மிக நீளமான கார் என்று கின்னஸ் புத்தகத்தில் (Guinness Record) 1986-ல் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் 100-அடி நீளம் (30.5 மீட்டர்) கொண்டது.

மிகவும் திறமை கொண்ட டிசைனரான ஜே ஓர்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் தான் டெலிவிஷன் சீரிஸான கினைட்-ல் பயன்படுத்தப்படும் பிரபல காரையும் வடிவமைத்தார். பல ஹாலிவுட் படங்களில் வரும் நவீன பல கார்களை வடிவமைத்தவரும் இவரே.

மறுசீரமைப்பு

பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய அமெரிக்கன் டிரீம் கார் ஒருகட்டத்தில் கைவிடப்பட்டு முறையான பராமரிப்பின்றி பரிதாபகரமான நிலைக்கு சென்றது.

பராமரிப்பில்லாததால் சக்கரங்கள் மற்றும் காரின் ஜன்னல்கள் கடும் சேதமடைந்தன. பெருமை வாய்ந்த அமெரிக்கன் ட்ரீமை மீட்டெடுக்கும் முயற்சியில் நியூயார்க்கின் நாசாவ் கவுண்டியில் உள்ள ஒரு தொழில்நுட்ப கற்பித்தல் அருங்காட்சியகமான ஆட்டோசியம் ஈடுபட்டது.

பின் ஆகஸ்ட் 2019 இல் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது. எனினும் கொரோனா பாதிப்பு காரணமாக தடைபட்ட மறு சீரமைப்பு பணிகள் மீண்டும் துவங்கி இருக்கிறது.

டிரீம் காரின் சிறப்பம்சங்கள்:

  • அமெரிக்கன் டிரீம் 30.5 மீட்டர் (100 அடி) நீளம் கொண்டது.
  • 26 சக்கரங்களை கொண்டுள்ள இந்த நீளமான காரை இருபுறமும் இயக்க முடியும்.
  • 1980-களில் இதை வடிவமைக்க தொடங்கிய ஓஹர்பெர்க் இறுதியில் தனது கனவை நிஜமாக்கினார்.
  • இந்த காரின் முன் மற்றும் பின்புறத்தில் ஒரு ஜோடி வி8 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • இது நீளமான கார் மட்டுமல்ல, ஆடம்பர சொகுசு வாகனமாகவும் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
  • நீச்சல் குளம், ஜக்குஸி, குளியல் தொட்டி, மினி-கோல்ப் மைதானம் மற்றும் ஒரு ஹெலிபேட் கூட இந்த காரில் இடம் பெற்றுள்ளது.
  • ஒரே நேரத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்ய முடியும்.
  • டிவிகள், ஃபிரிட்ஜ்கள் மற்றும் போன் வசதிகள் உள்ளிட்ட இன்னும் பல வசதிகளை உள்ளன.
  • இந்த கார் சினிமாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
  • தனிப்பட்ட உபயோகத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு 50 டாலர் முதல் 200 டாலர் வரை கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

மேலும் படிக்க

1 நிமிடம் தாமதமாக ரயிலை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம்!

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம்!

English Summary: The world's longest luxury car refurbishment! Published on: 16 November 2021, 06:06 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.