1. Blogs

அடித்து உதைத்த இளைஞர்- கடித்துக் குதறிய கழுதை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

நாம் எதைச் செய்கிறோமோ, அதையே நமக்குக் கொடுக்கும் உலகம் இது. அதனால்தான் நாம் நினைப்பு, செயல் என எல்லாவற்றிலுமே, நல்லதைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் நம் முன்னோர்கள்.

வாயில்லாத ஜீவனாக இருந்தாலும், வரம்பை மீறி அடக்குமுறையைக் கையாண்டால், இப்படித்தான் நடக்கும் என்பதற்கு, இந்த சம்பவமே உதாரணம். அதேநேரத்தில் இந்த வகையில்  அவற்றைத் துன்புறுத்தக்கூடாது என்பது மற்றவர்களுக்குப் பாடம்.

தாக்கும் இளைஞர்

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் வாயில்லா பிராணியான கழுதையை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்குகிறார். அந்த கழுதையும் அடி வாங்கிய படி கத்துகிறது.இருந்தும் அந்த இளைஞர் கழுதையை விடவில்லை. மீண்டும், மீண்டும் அடித்து உதைக்கிறார். அனைத்து அடிகளையும் அழுதபடி வாங்கி கொள்கிறது கழுதை. அதன்பின்பு அந்த வாலிபர், கழுதையின் முதுகில் ஏறுகிறார்.

தக்க பதிலடி

அப்போது அந்த கழுதை தனது வேலையைக் காட்ட தொடங்குகிறது.
தன் மீது ஏறி அமர்ந்த வாலிபரின் காலை திடீரென கவ்வி கொள்கிறது. அதோடு கடித்து குதறி வாலிபரை கீழே தள்ளுகிறது. அதன்பின்பும், அந்த இளைஞரை சுழற்றி, சுழற்றித் தாக்குகிறது.

பகிர்வு

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு உதாரணம் என்ற தலைப்புடன் வெளியாகி உள்ள இந்த வீடியோவுக்கு பலரும் பார்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க...

குறைந்தது எண்ணெய் விலை-இல்லத்தரசிகளுக்கு நிம்மதி!

ரூ.63,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாயப்பு!

English Summary: The youth who was beaten and kicked - the ass that was bitten! Published on: 31 July 2022, 11:39 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.