Postal Savings Scheme
தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டம் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் திருத்தப்படும். அவ்வகையில், ஜனவரி - மார்ச் காலாண்டுக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate)
கடந்த டிசம்பர் வரை தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கு 6.8% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை 7% ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. எனவே, தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்தால் முன்பை விட கூடுதல் வருமானம் கிடைக்கும். தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் ஒரு பாதுகாப்பான சிறு சேமிப்பு திட்டம். இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் தபால் அலுவலகம் வாயிலாக முதலீடு செய்யலாம். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு இது ஒரு உகந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. மேலும், இத்திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் வரி சலுகைகளும் கிடைப்பது கூடுதல் சிறப்பாகும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதால் 7% வட்டி விகிதத்தில் பாதுகாப்பான நிலையான வருமானம் கிடைக்கும். தேசிய சேமிப்பு சான்றிதழின் மெச்சூரிட்டி காலம் ஐந்து ஆண்டுகள். மேலும், தேசிய சேமிப்பு சான்றிதழை பிணையாக பயன்படுத்தி வங்கிகளில் கடன் பெறவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் படிக்க
பென்சனுக்கு உதவும் தங்க முதலீடு: 100% லாபம் உறுதி: உங்களுக்கு தெரியுமா?
பல லட்சங்களில் லாபத்தை அள்ளிக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
Share your comments