தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் உள்ளிட்ட 21 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மொத்த காலி பணியிடங்கள்: 21
பணியின் பெயர் : தொழில்நுட்ப உதவியாளர் ( Technical Assistant)
7 காலிப் பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.16,000
பணியின் பெயர் : ஜூனியர் ஆராய்ச்சியாளர் - (Junior Research Fellow)
8 காலிப் பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.20,000
பணியின் பெயர் : சீனியர் ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)
5 காலிப் பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி
துறைசார்ந்த பிரிவுகளில் டிப்ளமோ, பி.எஸ்சி., எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு முறை
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 29.01.2021 மற்றும் 02.02.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
தேர்வு நாள்
Technical Assistant பணிக்கு 29.01.2021 அன்றும், Junior Research Fellow, Senior Research Fellow பணிகளுக்கு 02.02.2021 அன்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
காலிப் பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களுக்கு https://tnau.ac.in/csw/job-opportunities என்ற வேளாண் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
மேலும் படிக்க...
வேலையில்லாதவருக்கு அரசின் உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31
மாதம் ரூ. 9,000 ஓய்வூதியம்! முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்!
Share your comments