தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்புகள் (Degrees)
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இங்கு வேளாண்மை சார்ந்த இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா (Annual Graduation Ceremony)
இங்கு பட்டப்படிப்பை முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்தி, பட்டங்கள் வழங்கப்படுவது வழக்கம்.
விண்ணப்பிக்கத் தகுதி (Eligibility to apply)
அதன் படி, இந்த ஆண்டு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு இப்பல்கலைக்கழகத்தால், 31.03.21 வரையிலானத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (Apply online)
விண்ணப்பங்களை www.tnau.ac.in இணையதளத்தில் உள்ள இணைப்பு (Link) மூலம் ஆன்லைனிலும், பல்கலைக்கழகத்தின் இணையதளமான HYPERLINK "http://www.tnau.ac.in/"www.tnau.ac.in ல் பதிவிறக்கம் செய்து தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணத்தை SBI Collect(The Comptroller, TNAU, Coimbatore ) மூலம் செலுத்தப்பட வேண்டும்.
ஆவணங்கள் (Documents)
தபால் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் அதாவது தற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழின் (PC) நகல், இணையதளம் மூலமாக வங்கியில் செலுத்தப்பட்டக் கட்டணத்திற்கான இரசீது மற்றும் சமீபத்தில் எடுத்தப் புகைப்படத்தை (2Nos)சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்கள் அறிய விரும்புவோர், 0422-6611506 என்றத் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! - 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி!!
Share your comments