முதலீட்டிற்கு உத்தரவாதமும், அதே சமயம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி கொடுக்கக் கூடியதாகவும் அஞ்சல் நிலைய சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. மற்ற பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை ஒப்பிடுகையில் இவை நல்ல பலனை கொடுக்கின்றன. இது மட்டுமல்லாமல் வரிச் சலுகையும் கூடுதலாக கிடைக்கிறது. பொதுவாக அஞ்சல் நிலைய சேமிப்புத் திட்டங்களில் 5.5 சதவீதம் முதல் 7.6 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படுகிறது. அதில் சிறப்பு வாய்ந்த 3 திட்டங்கள் குறித்து காண்போம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Selvamagal Savings Scheme)
பெயருக்கு ஏற்றார் போலவே இது பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் ஆகும். 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளின் பெயரில் நீங்கள் சேமிப்பு அக்கவுண்ட் தொடங்கிக் கொள்ளலாம். உங்கள் முதலீட்டிற்கு 7.6 சதவீத வட்டித் தொகை வழங்கப்படுகிறது. மிக குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த அக்கவுண்ட் முன்மொழியும் பெற்றோருக்கு வருமான வரிச் சட்ட விதி 80 சி-யின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. அதேபோன்று, திட்டத்தின் கீழ் கிடைக்கும் வட்டிக்கும் வரி கிடையாது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Plan)
இந்தத் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அக்கவுண்ட் திறந்து கொள்ளலாம். அவர்கள் தொடங்கும் சேமிப்புக் கணக்கிற்கு ஆண்டுதோறும் ரூ.7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகை ரூ.1,000 என்ற மடங்கில் இருக்க வேண்டும். இதில் அதிகபட்சமாக நீங்கள் ரூ.15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
பிஎஃப் திட்ட நிதி (PF Project Funding)
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு நிதியாண்டில் நீங்கள் குறைந்தபட்சமாக ரூ.500 தொடங்கி, அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்து கொள்ளலாம். தற்போது இந்தத் திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் என்பது, அக்கவுண்ட் தொடங்கப்பட்ட ஆண்டை தவிர்த்து, 15 ஆண்டுகள் ஆகும்.
மேலும் படிக்க
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருமா? அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்ப்பு!
Share your comments