Likeகளை வாங்கிக்குவித்து, டிரெண்டிங்கில் வலம் வரவேண்டும் என்ற எண்ணம், இன்றைய இளையத் தலைமுறையினருக்கு மோகமாகவே மாறி வருகிறது. இதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்துவிடுகிறார்கள்.
அப்படியொரு சம்பத்தைச் செய்து,இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு இளைஞர், பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளார்.
சர்வதேச அளவில் டிரெண்டிங் (Trending internationally)
கொய்ருல் அனம் என்ற அந்த இளைஞர், தனது வீட்டில், தான் பயன்படுத்தும் குக்கரைத் திருமணம் செய்துகொண்டதால் ஒரே நாளில் சர்வதேச அளவில் டிரெண்டிங்கில் இடம்பெற்றார்.
மணக்கோலம்
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தோனேசியாவின் பாரம்பரிய திருமண உடை அணிந்திருப்பதோடு, குக்கருக்கும் மணப்பெண்ணைப் போல அலங்காரம் செய்து, முக்காடு ஒன்றையும் அணிவித்திருக்கிறார்.
இந்த செயல் அவர் விரும்பியவாறு அவரை டிரெண்டிங்கில் டாப் இடத்தைப் பிடித்திருக்கிறது.கொய்ருல் அனம் என்ற இந்த நபர் கடந்த வாரத்தில் டிரெண்டிங்கில் முன்னணி இடத்தில் காணப்பட்டார். தனது குக்கருடன், புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட அனம், தனது குக்கரைத் திருமணம் செய்வதற்காக தானும் தனது குக்கரும் ஒப்புதல் கையொப்பம் இடுவதாகப் படங்களைச் சேர்த்துள்ளதோடு, திருமணம் முடிந்தவுடன் குக்கரை முத்தமிட்டு கூடுதலாக லைக்ஸ் அள்ளியுள்ளார்.
தனது பதிவில் கொய்ருல் அனம், தான் குக்கரைத் திருமணம் செய்துகொண்டதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். தனது குக்கர் வெள்ளையாக இருப்பதாகவும், தனக்குக் கீழ்ப்படிவதாகவும் குறிப்பிட்டுள்ள கொய்ருல் அனம், நீ இல்லாமல் எனது உணவு உண்பதற்குத் தயாராவதில்லை என்றும் தனது குக்கர் மீதான தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
விவாகரத்தும் ஆயிடுச்சு
கொய்ருல் அனமுக்கும் அவரது குக்கருக்கும் திருமணம் முடிந்த நான்கு நாள்களுக்குப் பிறகு, தனது பேஸ்புக் பக்கத்தில் தனது குக்கரை விவாகரத்து செய்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார். அதற்குக் காரணமாகத் தனது குக்கரால் வெறும் அரிசியை மட்டும் தான் சமைக்க முடிவதாகத் தெரிவித்துள்ளார் அவர்.
7000 லைக் (7000 Likes)
கொய்ருல் அனமின் திருமணப் பதிவுகள் வைரலானதோடு, சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதனை லைக் செய்துள்ளனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேலான ஷேர்களும் அவரது பதிவுகளுக்குக் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க...
வங்கி ஊழியர்களுக்கு 21 நாட்கள் விடுமுறை - அக்டோபரின் அடிக்குது ஜாக்பாட்!
Share your comments