இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி (LIC) பல்வேறு காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், எல்ஐசி நிறுவனம் தற்போது டெக் டெர்ம் (Tech Term) மற்றும் ஜீவன் அமர் (Jeevan Amar) ஆகிய இரண்டு பாலிசிகளையும் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
எல்ஐசி பாலிசி (LIC Policy)
டெக் டெர்ம் மற்றும் ஜீவன் அமர் ஆகிய இரண்டு திட்டங்களிலுமே பெண்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. மேலும், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிக பிரீமியமும், புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு குறைவான பிரீமியமும் வசூலிக்கப்படும் என எல்ஐசி தெரிவித்துள்ளது. எல்ஐசி நிறுவனம் டெக் டெர்ம் மற்றும் ஜீவன் அமர் ஆகிய இரண்டு திட்டங்களையும் வாபஸ் பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் புதிய வடிவில் இத்திட்டங்களை கொண்டுவந்துள்ளது எல்ஐசி நிறுவனம். இவ்விரண்டு திட்டங்களின் அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
டெக் டெர்ம்
டெக் டெர்ம் (Tech Term) திட்டம் மார்க்கெட்டுடன் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். அதாவது, இத்திட்டம் பங்குச் சந்தையுடன் தொடர்புடையது கிடையாது. எனவே, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் இத்திட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காது. இத்திட்டத்தில், பாலிசிதாரர் பாலிசி காலத்திலேயே துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு பணப் பாதுகாப்பு கிடைக்கும். ஒரே பிரீமியம், ரெகுலர் பிரீமியம், லிமிட்டெட் பிரீமியம் என மூன்று வகையான பிரீமிய வசதி உள்ளது. பாலிசி காலம் மற்றும் பிரீமியம் செலுத்தும் காலத்தை தேர்வு செய்துகொள்ளலாம். பெண்களுக்கு பிரீமியத் தொகையில் சலுகை உண்டு. மேலும், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், புகைப்பழக்கம் இல்லாதவர்கள் என இரண்டு வகையான பிரீமியம் உள்ளது.
ஜீவன் அமர் திட்டம் (Jeevan Amar)
ஜீவன் அமர் (Jeevan Amar) திட்டமும் பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். எனவே, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் இத்திட்டத்தை பாதிக்காது. இந்த திட்டத்திலும் பாலிசிதாரர் பாலிசி காலத்திலேயே துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு பணப் பாதுகாப்பு வழங்கப்படும். ஒரே பிரீமியம், ரெகுலர் பிரீமியம், லிமிட்டெட் பிரீமியம் என மூன்று வகையான பிரீமிய வசதி உள்ளது. பெண்களுக்கு பிரீமியத் தொகையில் சலுகை உண்டு. இதுபோக, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு என இரண்டு வகையான பிரீமியம் உள்ளது.
இவ்விரண்டு திட்டங்களிலும் பாலிசிதாரர் எவ்வளவு பிரீமியம் செலுத்துவது என்பது அவரின் வயது, புகைப்பிடிக்கும் பழக்கம், பாலினம் (பெண்களுக்கு சிறப்பு சலுகை), பாலிசி காலம், பிரீமியம் செலுத்தும் காலம், உத்தரவாதத் தொகை ஆகியவை தீர்மானிக்கின்றன. ஒரே பிரீமியம் எனில் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் செலுத்த வேண்டும். ரெகுலர் மற்றும் லிமிட்டெட் பிரீமியம் எனில் குறைந்தபட்சம் 3000 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க
இரு மடங்கு லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்: முழு விவரம் இதோ!
பெண்களுக்கு ஏற்ற சிறப்பான சேமிப்புத் திட்டம்: வெறும் 500 ரூபாயில்!
Share your comments