தமிழக அரசு மாநிலம் முழுவதும் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் மூலம் ஊராட்சி, பகுதிகளில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இலவச நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்கி வருகிறது.
கடந்தாண்டுகளில் கிராம ஊராட்சிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் செயல் படுத்திய இத்திட்டம் நடப்பாண்டில் பேரூராட்சி வரை விரிவு படுத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுகளில் பயனாளிகளுக்கு 50 கோழி குஞ்சுகளும், அவற்றை பராமரித்து தங்குமிடம் அமைக்க ரூ. 2,500ம் வழங்கப்பட்டு வந்தது.
இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 8,700 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தற்போதைய தகவலின் படி கோழி குஞ்சுகளின் எண்ணிக்கையை 25 ஆக குறைத்தும், ஷெட் அமைக்க நிதி கிடையாது என்பது போன்றும் கூறப்படுகிறது. இதனால் கால்நடை பராமரிப்புத்துறையினர் உண்மையான பயனாளிகளின் கண்டறிவதில் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments