1. Blogs

கூடுதல் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைத்துக் கொள்ள அழைப்பு

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Sugarcane drip irrigation

அரியலூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதல் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் "ஒவ்வொரு துளி நீரிலும் அதிக பயிர்ச் சாகுபடி" என்ற நோக்கத்தில் சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம் போன்றவற்றிற்கு 75 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை மானியம் வழங்கி வருகிறது. இத் திட்டத்தின் கீழ் தற்போது அரியலூர் மாவட்டத்தில் கரும்புப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு  சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, அதிக வருவாய் பெற தமிழக அரசு கூடுதல் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக 300 ஹெக்டர் பரப்பளவிற்கு ரூ.1.17 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவிகிதமும் மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

English Summary: Under Per Drop More Crop Scheme Government allotted more subsidy for sugarcane Farmers Published on: 29 November 2019, 12:38 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.