1. Blogs

லட்சாதிபதியாக விருப்பமா? சீக்ரெட் விஷயம் இதோ!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

தபால் நிலையத்தில் சேமித்தே நீங்கள் லட்சாதிபதி ஆகலாம். என்னங்க, நம்ப முடியவில்லையா. சந்தேகமே வேண்டாம். நிச்சயம் நீங்கள் லட்சாதிபதியாவது உறுதி. எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு தபால் அலுவலக சேமிப்பு பெரிய அளவில் கைகொடுக்கிறது. இதற்குப் அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களே சாட்சி.

சிறிய முதலீடுகளில் பாதுகாப்பான லாபத்தைப் பெற விரும்புபவர்களுக்கு தபால் நிலையத்தின் நிலையான வைப்புநிதித் திட்டம் (FD) நல்ல தேர்வாக இருக்கும். தபால் அலுவலகத்தில் FD திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பல வசதிகளைப் பெறலாம். மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், உங்களுக்கு லாபத்துடன் அரசாங்க உத்தரவாதமும் கிடைக்கும். இதில், காலாண்டு அடிப்படையில் போஸ்ட் ஆஃபீஸ் FD வட்டி விகிதத்தின் வசதியைப் பெறுவீர்கள்.

தொடங்குவது எப்படி?


இத்திட்டத்தில் கணக்கு தொடங்குவது மிகவும் எளிதானது. 1, 2, 3, 5 ஆண்டுகளுக்கு தபால் அலுவலகத்தில் FD திட்டத்தில் பயன் பெறலாம்.

நன்மைகள்

  • தபால் அலுவலகத்தில் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது.

  • முதலீட்டாளர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.

  • FD ஆஃப்லைனில் (பணம், காசோலை) அல்லது ஆன்லைன் (நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங்) செய்யலாம்.

  • வருமான வரி தாக்கல் செய்யும் போது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு கிடைக்கும்.

  • ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு FDயை எளிதாக மாற்றலாம்.

தொடங்குவது எப்படி?

அருகில் உள்ள தபால் நிலையத்தில் காசோலை அல்லது பணமாகச் செலுத்தி கணக்கைத் திறக்கலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் கணக்கு தொடங்கலாம். அதிகபட்ச தொகையை டெபாசிட் செய்ய வரம்பு இல்லை.

வட்டி

தபால் அலுவலகத்தில் 7 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான FDக்கு 5.50 சதவிகிதம் வட்டி கிடைக்கும். அதே வட்டி விகிதம் 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கும் கிடைக்கும். இது தவிர, 3 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 5.50 சதவீதம் வட்டி கிடைக்கும். 3 வருடங்கள் ஒரு நாள் முதல் 5 வருடங்கள் வரை FDக்கு 6.70 சதவீத வட்டி கிடைக்கும்.

மேலும் படிக்க...

சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு!

34 மாணவர்கள் தற்கொலை - விரக்தியின் உச்சக்கட்டம்!

English Summary: Want to become a millionaire? Here's the secret thing! Published on: 12 June 2022, 04:21 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.