1. Blogs

வீடு தேடி பணம் வர வேண்டுமா? SBI-யின் சூப்பர் பிளான்! உடனே பதிவு செய்யுங்கள்!

KJ Staff
KJ Staff
Money

The Economic Times

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக டோர் ஸ்டெப் வங்கிச் சேவையைத் (Door step bank service) தொடங்கியுள்ளது.

கொரோனா (Corona) வந்த பிறகு பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக வங்கிகள் போன்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். இதனால் வங்கிக்குச் செல்லாமல் முடிந்தவரையில் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாகப் பரிவர்த்தனைகளை (Transactions) மேற்கொள்கின்றனர். இருந்தாலும் ரொக்கப் பணத்துக்கு ஏடிஎம் (ATM) மையங்களுக்கோ அல்லது வங்கிக்கோ சென்றாக வேண்டும். இதில் உள்ள சிரமத்தைப் போக்குவதற்காக டோர் ஸ்டெப் வங்கிச் சேவையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்படுத்துகிறது.

பதிவு செய்வது எப்படி?

இந்தச் சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் 1800 1037 188 அல்லது 1800 1213 721 என்ற எண்களுக்கு அழைத்தால் போதும். மேலும் தகவல்களுக்கு http://bank.sbi என்ற முகவரியில் பார்க்கலாம் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (SBI) தெரிவித்துள்ளது.

என்னென்ன சேவைகள் கிடைக்கும்?

  • பணம் திரும்பப் பெறுதல் (cash withdrawals)
  • டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் (Digital life certificate)
  • காசோலைகள் / வரைவுகள் / கட்டண ஆர்டர்கள் (cheques/drafts/pay order)
  • புதிய காசோலை புத்தக கோரிக்கை சீட்டு (New cheque book requisition slip)
  • ஐ.டி சலன் (IT challan)
  • நிலையான வழிமுறைகள் கோரிக்கைகள் (Standing Instructions Requests)
  • வரைவுகள் / கட்டண ஆர்டர்கள் (Drafts/pay orders)
  • கால வைப்பு ரசீதுகள் (Term deposit receipts)
  • கணக்கு அறிக்கை (Account statement)
  • டி.டி.எஸ் / படிவம் 16 சான்றிதழ் (TDS/form 16 certificate)
  • பரிசு அட்டை (Gift card)


SBI வங்கியின் இந்த சேவையால், வயதானவர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை. வீடு தேடி வங்கியில் இருந்து பணம் வருவதால், நமக்கு நேரமும் மிச்சமாகும். உடனே இந்தச் சேவையில் பதிவு செய்து பயன் பெறுங்கள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்! கரூர் பெட்ரோல் பங்கின் சூப்பர் அறிவிப்பு!

வெறும் 160 ரூபாய் முதலீட்டில் 23 லட்சம் சம்பாதிக்கலாம்!

English Summary: Want to come home looking for money? SBI's Super Plan! Sign up now!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.