10ம் வகுப்பு தகுதியுடன், கனரக வாகனம் ஓட்டத் தெரிந்தவரா நீங்கள்? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குதான். கடைசி வரைப் படிக்கத் தவறாதீர்கள்.
12 பணியிடங்கள் (12 workplaces)
இந்திய அஞ்சல் துறையில் கனரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான தகுதி உள்ளவர்களுக்கு 12 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
வேலை (Job)
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 12 Staff Car Driver பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஊதியம் (Salary)
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900 ஊதியமாக வழங்கப்படும்
கல்வித்தகுதி (Education Qualification)
10-வது தேர்ச்சி பெற்று கனரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)
விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் HYPERLINK "http://www.indiapost.gov.in/"www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
ஓட்டுநர் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
காலக்கெடு (Last Date)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டியக் கடைசிநாள் 10.03.2021.
மேலும் விவரங்களை HYPERLINK "http://www.indiapost.gov.in/"www.indiapost.gov.in என்ற அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...
Share your comments