ஒரு காலத்தில் 1500 ரூபாய் மிகப்பெரியத் தொகையாகக் கருதப்பட்ட நிலையில், இன்று அதன் மதிப்பு மிகமிகக் குறைவு.
சொல்லப்போனால், ஞாயிற்றுக்கிழமைகளில் நம்முடைய விருப்பமான இறைச்சி உணவு சாப்பிட வேண்டுமானால்கூட, குறைந்தபட்சம் 1500 ரூபாய் செலவிட வேண்டி உள்ளது. ஏனெனில் அந்த அளவுக்குப் பணத்தில் மதிப்பு குறைந்துவிட்டது.
ஆனால், ஓய்வு காலத்தில் கையில் 50 லட்சம் ரூபாயுடனுடம், கவுரவத்துடனும் கழிக்க விரும்பும் நபரா நீங்கள்? அப்படியானால் இந்த திட்டம் உங்களுக்குத்தான்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலமாக சிறிய தொகையை முதலீடு செய்து கோடிகளில் லாபம் ஈட்டலாம்.
ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாயை இந்தத் திட்டத்தில் சேமித்தால் ரூ.50 லட்சம் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
எங்கே முதலீடு செய்வது? (Where to invest?)
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய மக்களின் நிதி நிலை மிகவும் மோசமாகியுள்ளது. எனினும் கடந்த சில மாதங்களில் நிதிச் சந்தைகள் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளன.
சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் இப்போது நல்ல லாபம் தரத் தொடங்கியுள்ளன. முதலீட்டுத் திட்டங்களில் சேமித்து அதிக லாபம் பெறுவதற்கு இது சிறந்த காலம் என்று சந்தை வல்லுநர்களும் கூறுகின்றனர். நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதித் திட்டம் நல்ல வாய்ப்பாக அமையும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை எஸ்.ஐ.பி. (SIP - Systematic Investment Plan)முதலீட்டில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் லட்சாதிபதி ஆகிவிடலாம்.
ரூ.500 இருந்தால் போதும்! (Where to invest?)
முதலீடு செய்வதற்கு மிகப் பெரிய தொகை வேண்டும் என்ற அவசியம் இல்லை. 100 ரூபாய் தொடங்கி நீங்கள் சேமிக்கலாம். ஆனால் தொடர்ச்சியாகச் சேமிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 500 ரூபாயைத் தொடர்ச்சியாக நீங்கள் சேமித்து வந்தாலே 20 ஆண்டுகளில் 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
இதே தொகையை 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு ரூ.17.64 லட்சம் கிடைக்கும்.
50 லட்சம் சம்பாதிக்க (Earn 50 lakhs)
நீங்கள் உங்களது ஓய்வுக் காலத்தில் 50 லட்ச ரூபாய் வரையில் சம்பாதிக்க நினைத்தால், ஒவ்வொரு மாதமும்1,500 ரூபாயைத் தொடர்ச்சியாகச் சேமிக்க வேண்டும். 30 ஆண்டுகளில் இந்த இலக்கை நீங்கள் அடைந்துவிட முடியும். இப்போது 30 வயது என்று வைத்துக்கொண்டால் உங்களது 60ஆவது வயதில் உங்கள் கையில் ரூ.53 லட்சம் இருக்கும். ஓய்வுக் காலத்தில் இந்தத் தொகை உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
SIP (SIP - Systematic Investment Plan)
வங்கிகளில் செயல்பாட்டில் இருக்கும் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டங்களை விட SIP முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிறது. தற்போதைய சூழலில் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் 5 முதல் 6 சதவீத ரிட்டன்ஸ் மட்டுமே கிடைக்கிறது.
ஆனால், SIP முதலீட்டில் 12 சதவீதம் வரையில் ரிட்டன்ஸ் கிடைக்கிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால் SIP முதலீடு என்பது பங்குச் சந்தை சார்ந்தது. எனவே சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து இதில் லாபம் கிடைக்கும்.
அளவுக்கு அதிகமாகவும் கிடைக்கலாம். குறைவாகவும் கிடைக்கலாம். ஆனால் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் நிலையான ரிட்டன்ஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எப்படி உறுப்பினராவது?
வெறும் 4% விவசாயிகளே வேளாண் பண்ணைய முறைகளைப் பின்பற்றுகிறார்கள்-ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
நாட்டு ரக விதைகள் வேண்டுமா? - இங்கே இலவசமாகக் கிடைக்கும்!
Share your comments