ரிசர்வ் வங்கியின் (RBI) பெயரைப் பயன்படுத்தி, பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாகவோ அல்லது விற்றுத் தருவதாகவோ சில போலி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்கின்றனர்.
மக்கள் இவர்களுடைய முயற்சிக்கு இரையாகி விடக்கூடாது என, இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
ரிசர்வ் வங்கியின் பெயர், முத்திரை போன்ற வற்றை பயன்படுத்தி, ‘ஆன்லைன்’ தளங்கள் (Online Websites) வாயிலாக, பழைய நாணயங்கள் (Old coins), ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை வாங்குவதாக அல்லது விற்பதற்காக கூறி, கட்டணம் எனும் பெயரில் பணத்தை பெற்று மோசடி நடைபெறுகிறது. ரிசர்வ் வங்கி இதுபோன்ற நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை.
இது போன்ற பரிவர்த்தனைகளுக்காக, எந்த கட்டணமும் வசூலிப்பதும் இல்லை. மேலும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, எந்த நிறுவனத்தையும் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கவும் இல்லை. எனவே, பொதுமக்கள் இத்தகைய நபர்கள் அல்லது நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க
குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு வெண்கலம்: லவ்லினா அசத்தல்!
கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!
Share your comments