நமது எதிர்கால போக்குவரத்து, எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ந்துதான் இருக்க போகிறது என்பது உறுதியாகி விட்டது. அதற்கான அறிகுறிகளும் தற்போதே தென்பட தொடங்கி விட்டன. இந்தியாவை பொறுத்தவரையில் தற்போது எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை காட்டிலும், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகி கொண்டுள்ளன. நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதன் மூலமாக மட்டுமல்லாது தற்போது உள்ள ஐசி இன்ஜின் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதன் மூலமும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கலாம்.
இதன்படி கோகோஏ1 (GoGoA1) என்ற நிறுவனம் ஹீரோ ஸ்பிளெண்டர் உள்ளிட்ட பைக்குகளுக்கு கன்வெர்சன் கிட்களை (Conversion Kits) உற்பத்தி செய்து வருகிறது.
கன்வெர்ஷன் கிட்கள் (Conversion kits)
கன்வெர்ஷன் கிட்கள் மூலம் பெட்ரோலில் ஓடக்கூடிய பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றம் செய்ய முடியும். மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கோகோஏ1 நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டிற்கு 35 ஆயிரம் ரூபாயை விலையாக நிர்ணயம் செய்துள்ளது. இது சரியான விலை நிர்ணயமாக கருதப்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டின் ரேஞ்ச் 151 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். கோகோஏ1 நிறுவனம் ஆர்டிஓ-வால் அங்கீகரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் கன்வெர்சன் கிட்களை விற்பனை செய்கிறது. வரும் காலங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கும் கோகோஏ1 நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெட்ரோலில் இயங்க கூடிய இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை கோகோஏ1 நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு தற்போது பலரும் விரும்புகின்றனர்.
மேலும் படிக்க
எலக்ட்ரிக் வாகனம் வாங்குவோர் கவனத்திற்கு: மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறிங்களா? துவங்கியாச்சு முன்பதிவு!
Share your comments