மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கிராம சுற்றுலாத் தலங்களை ஹெலிகாப்டர் (Helicopter) மூலம் கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள தெற்குதெரு கிராமத்தில் தனியார் சார்பில் இந்த முயற்சி மேறகொள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஒரு பொறியியல் கல்லூரியும், கோவையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் நிறுவனமும் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளன.
இந்த சேவையில் 6 பேர் பயணிக்கக் கூடிய இந்த ஹெலிகாப்டரில் அழகர்கோவில், ஒத்தக்கடை, மதுரை மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடியிலுள்ள புராதன சின்னங்கள் உள்ளிட்டவற்றை கண்டுகளிக்க முடியும். அவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆகும் நேரம் எவ்வளவு தெரியுமா? 15 நிமிடங்கள்தான்.
டிச.29ம் தேதி வரை (Till Dec.29th)
சுமார் 15 நிமிட பயணத்தில் கண்டு ரசிக்கும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி தொடங்கிய இந்த ஹெலிகாப்டர் சேவை, தற்போதைக்கு வரும் 29-ந் தேதி வரை மட்டுமே முதல்கட்டமாக அளிக்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து, பயணிகளின் வருகையை பொறுத்து ஹெலிகாப்டர் சேவை நீட்டிக்கப்படும் எனவும் அந்த தனியார் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆக ஹெலிகாப்டர் சேவை தொடருமா என்பது, வாடிக்கையாளர்கள் கையில்தான் உள்ளது.
மேலும் படிக்க...
தெளிப்பு நீர் பாசனத்திற்கு 100% மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!
வீட்டிலேயே எலுமிச்சை வளர்க்க எளிய டிப்ஸ்!
TNAUவின் புதிய ரகங்கள், ஒட்டுரகங்கள் - காணொளிக் கண்காட்சி மூலம் வணிகமயமாக்கல்!
Share your comments