மெட்டா CEO Mark Zuckerberg வாட்ஸ்அப்பிற்கான புதிய அம்சத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்பின் போது தங்கள் திரையை மறுமுனையில் இருப்பவருடன் பகிர இயலும்.
வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் கைப்பற்றியதன் மூலம் பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்கிரீன்-ஷேரிங் என்கிற வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
Google Meet மற்றும் Zoom மீட்டிங்குகளில் நாம் செய்வது போல், புதிய அம்சம் பயனர்கள் வீடியோ அழைப்பின் போது தங்கள் திரையை எளிதாகப் பகிர உதவும். ஆனால், பெரிய குழு அளவிலான வீடியோ காலிற்கு இந்த வசதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. WhatsApp தற்போது 32 நபர்கள் வரை இணைக்கும் வசதியை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்புகளை (update version) நிறுவியிருக்க வேண்டும். வீடியோ அழைப்பின் போது, திரையின் அடிப்பகுதியில் புதிய ‘பகிர்வு’ (share) ஐகானைக் காண்பார்கள். அதைத் தட்டுவதன் மூலம், திரைப் பகிர்வு அணுகலை வழங்கும்படி அவர்களிடம் கேட்கப்படும். அவர்களின் திரை பின்னர் மற்ற தரப்பினருக்கு ஸ்ட்ரீம் செய்யப்படும்.
வீடியோ அழைப்புகளுக்கான லேண்ட்ஸ்கேப் பயன்முறையையும் இந்த அம்சம் ஆதரிக்கிறது. டெஸ்க்டாப் இயங்குதளங்களில் இருந்து திரையைப் பகிரும் போது, அதிகளவிலான பரந்த ஸ்கீர்னை மற்றவருடன் பகிர இயலும்.
வாட்ஸ்அப்பின் திரை பகிர்வு குழு அழைப்புகளுக்கும் வேலை செய்கிறது. எனவே இது தொழில்முறை அமைப்புகளில் WhatsApp ஐ மேலும் பயன்படுத்த தூண்டுகிறது. திரைப் பகிர்வுக்கு Google Meet மற்றும் Zoom போன்ற பயன்பாடுகளை முன்பு நம்பியிருந்த பயனர்கள் இப்போது அதே நோக்கத்திற்காக WhatsApp ஐப் பயன்படுத்தலாம்.
முன்னதாக ஒரே வாட்ஸ் அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், பயனர்கள் இப்போது ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் தங்கள் WhatsApp கணக்கைப் பயன்படுத்தலாம்.
முதன்மையாக பயன்படுத்தும் போனில் நீண்ட காலத்திற்கு வாட்ஸ் அப் செயலற்ற நிலையில் இருந்தால், WhatsApp பயனரின் கணக்குடன் இணைக்கப்பட்ட அனைத்து துணை சாதனங்களும் (கணினி, மொபைல்) தானாகவே வெளியேறும் வகையில் இருந்தது. தற்போது 4 போன்கள் வரை பயனர்கள் அக்கௌவுண்டில் இணையலாம் என்பதால் செய்தி அனுப்புவதை மிகவும் வசதியாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
லாக் அவுட் செய்யாமலேயே சாதனங்களுக்கு இடையில் மாற அனுமதிக்கிறது மற்றும் அவர்கள் நிறுத்திய இடத்திலிருந்து அரட்டைகளை(chat) மீண்டும் தொடங்க அனுமதிக்கிறது என்று WhatsApp பரிந்துரைத்துள்ளது.இந்த புதிய அம்சங்களுக்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் காண்க:
Share your comments