1. Blogs

மட்டன் சமைக்க மறுத்த மனைவி- போலீஸிடம் புகார் அளித்தக் கணவன்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Wife refuses to cook mutton - Husband complains to police!

மனைவி மட்டன் சமைக்க மறுத்ததால் 100க்கு போன் போட்டு புகார் அளித்த போதைக் கணவனை போலீசார் கைது செய்தனர். போலீஸாரின் கட்டுப்பாட்டு அறைக்கு எப்போதாவது விநோதமான அழைப்புகள் வருவது உண்டு. அப்படி வந்த அழைப்பின் மிக சுவாரஸ்யமான சம்பவம் இது.

தெலங்கானா மாநிலத்தில் போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தனக்கு தன் மனைவி மட்டன் செய்து தர மறுப்பதாகவும் அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பேசியுள்ளார்.

தவறான அழைப்பு

இதை கேட்டு ஆத்திரமடைந்தப் போலீசார் முதலில் இதை ஏதோ ராங்க் கால் என நினைத்து , அந்த அழைப்பைத் துண்டித்தனர். ஆனால் இவர் மீண்டும் மீண்டும் 6 முறை தொடர்பு கொண்டு தன் மனைவி மட்டன் சமைக்க மறுப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தப் போலீசார், இவருக்கு தகுந்தப் பாடம் கற்பிக்க முடிவு செய்தனர். உடனடியாக அவரது முகவரியை வாங்கி அங்கு பேட்ரோல் போலீசார் அனுப்பினர்.

அங்கு சென்ற போது தான் உண்மை தெரியவந்துள்ளது. போனில் பேசியவர் பெயர் நவீன் என்றும், அவர் குடிபோதையில் வீட்டிற்கு மட்டன் வாங்கி வந்துள்ளார். அவர் குடித்துவிட்டு வந்திருந்ததால் அவரது மனைவி அதை சமைத்து தர மறுத்துள்ளார். இதனால் கடுப்பான நவீன் போலீசிற்கு போன் செய்தது தெரியவந்தது. அப்பொழுது நவீன் மது போதையில் இருந்ததால் போலீசார் அவரை விட்டு சென்றுனர்.

ஆனால் மறுநாள் காலை மீண்டும் அவர் வீட்டிற்கு சென்று மது போதை தெளிந்ததும் அவரது கைது செய்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்தனர். அப்பொழுது தான் செய்த தவறை உணர்ந்த அவர் மன்னிப்பு கேட்டார். அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க...

பளபளக்கும் பப்பாளி-ஆண்மைத்தன்மையை பாதிக்கும்!

இவற்றைத் தவிர்க்காவிட்டால், உங்கள் எலும்புகள் பொடிப்பொடியாவது உறுதி!

English Summary: Wife refuses to cook mutton - Husband complains to police! Published on: 21 March 2022, 01:32 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.