1. Blogs

காட்டுத் தீயால் அழியும் காடுகள்: அதிகரிக்கும் கார்பன்!

R. Balakrishnan
R. Balakrishnan
Wildfire Deforestation: Increasing Carbon!

உலகில் கார்பன் வெளியீடு அளவை குறைப்பதில் அமேசான் காடுகளுக்கு முக்கிய பங்குள்ளது. காடு அழிப்பு, பருவநிலை மாற்றம் காரணமாக அமேசான் காட்டின் கார்பன் (கரியமிலவாயு) ஈர்க்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகின் பெரிய காடு அமேசான். பரப்பளவு 55 லட்சம் சதுர கி.மீ. இதன் 60 சதவீத பகுதி பிரேசிலில் உள்ளது. இதற்கடுத்து பெருவில் 13%, கொலம்பியாவில் 10% உள்ளது. மீதி 17 சதவீதம் பொலிவியா, ஈக்குடார், பிரெஞ்சு கயானா, கயானா, வெனிசுலாவில் பரவி உள்ளது.

காட்டுத் தீ (Wild Fire)

அமேசானின் தென் கிழக்கு பகுதி (பிரேசில்) மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் மரங்கள் காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளன. இதனால் மரங்களின் பரப்பளவு குறைந்துள்ளது. இப்பகுதியில் கோடை காலத்தில் வெப்பநிலை உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு வெளியான ஆய்வில் 2010 - 2019 இடையிலான காலத்தில் பிரேசில், முந்தைய அளவை விட 20 சதவீதம் கூடுதல் கார்பனை வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நடத்திய ஆய்வுக்காக அமேசான் காடுகளில் 600 இடங்களில் விமானம் மூலம் காற்று மாதிரியை சேகரித்தனர். 'இதில் மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் (பிரேசில்) 30 சதவீதம் காடுகள் அழிப்பு நடந்துள்ளது. மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் 10 மடங்கு கூடுதல் கார்பன் வெளியீடு இருக்கிறது. இதன் காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவின் அளவிலும் வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வெப்பநிலை என்பது ஆண்டின் இரண்டு வெப்பமான மாதங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.

விழிப்புணர்வு (Awareness)

இது உலக மக்களுக்கும் பிரேசிலுக்கும் கவலையளிக்கும் செய்தி என பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி லுாசியானா காட்டி தெரிவித்துள்ளார். இனியாவது உலக மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட வேண்டும். இல்லையெனில் ஆபத்து எதிர்பாராத அளவையும் தாண்டும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க

வண்டலூர் பூங்காவில் வெளிநாட்டு மரங்களை வளர்க்க அனுமதி!

மூளையை கட்டுப்படுத்தும் நவீன சிப்: விரைவில் பரிசோதனை துவக்கம்!

English Summary: Wildfire Deforestation: Increasing Carbon! Published on: 28 January 2022, 08:43 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.