குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, கல்வி செலவுகளுக்காக சேமிக்க வேண்டும் என அனைவரும் நினைப்போம். ஆனால் எதில் முதலீடு (Investment) செய்வது? எது பாதுகாப்பானது? இலாபகரமானது எது? என் இப்போது பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது வங்கி டெபாசிட்டுகள் (Bank deposit) தான். ஏனெனில் வட்டி குறைவாக இருந்தாலும், பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதனையும் தாண்டி நல்ல லாபகரமான, பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களும் உள்ளன. அதனை பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.
மியூச்சுவல் ஃபண்டுகள் தான் சிறந்தது?
நிபுணர்கள் நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) திட்டங்களே சிறந்தது என கருதுகின்றனர். ஏனெனில் பங்கு சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய வேண்டுமெனில், நீங்கள் முழு நேரம் அதில் ஈடுபட வேண்டும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது ஃபண்ட் மேனேஜர்கள் (Fund Managers) அதனை பார்த்துக் கொள்வார்கள். அவர்களின் வேலையே இது தான் என்பதால் நிறைகுறைகள் தெரிந்திருக்கும் என கூறுகின்றனர். மாதம் 5000 ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்பதால், முதலீட்டுக்கு சிறந்தது, மியூச்சுவல் ஃபண்டுகள் தான் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் 100 ரூபாய் கூட முதலீடு செய்ய முடியும். அதுவும் எஸ்ஐபி முறையில் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்கள் முதலீடுகளும் பெருகும். ஆக இது தான் சிறந்த ஆப்சனாக இருக்கும்.
லிக்விட் ஃபண்டுகள்
ஃபண்டுகள் பரிந்துரை நீங்கள் பங்கு சந்தையில் நீண்டகால நோக்கில் பெரிய அளவிலான தொகையை முடக்குவது என்பது சரியான விஷயமாக இருக்காது. ஆக உங்களுக்கு லிக்விட் ஃபண்டுகள் சிறந்த வழியாக இருக்கலாம். அந்த வகையில் நாம் பரிந்துரைப்பது, Axis Blue Chip Fund, DSP midcap Fund, SBI small cap fund ஃபண்டுகள் தான். இந்த ஃபண்டுகளை நிபுணர்கள் பரிந்துரை செய்திருந்தாலும், ஒரு முறைக்கு இருமுறை அதனை பற்றி நீங்கள் அறிந்து கொண்டு, பின் முதலீடு செய்வது நல்லது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments