1. Blogs

Paytm-ன் இந்த சிறப்பு சலுகை மூலம் ரூ.135-க்கு கேஸ் சிலிண்டர் பெறலாம்!! விவரம் உள்ளே!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

ஆன்லைன் கட்டண பயன்பாடான Paytm ஒரு சிறப்பு சலுகையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 819 ரூபாய் கேஸ் சிலிண்டரை வெறும் 119 ரூபாய்க்கு வாங்க முடியும். மார்ச் 31 மதியம் 12 மணி வரை மட்டுமே இச்சலுகையை வாடிக்கையாளர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சிலிண்டர் விலை உயர்வு

இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் சமையல் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலையில், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் கேஷ் பேக் போன்ற பல்வேறு சலுகைகளை மொபைல் ஆப் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதன்படி, ஆன்லைன் கட்டண பயன்பாடான Paytm ஒரு சிறப்பு சலுகையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்தால் உங்களுக்கு 700 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும். பேடிஎம் ஆப் மூலமாக முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும்.

Paytm மூலம் புக்கிங் செய்வது எப்படி?

  • உங்கள் தொலைபேசியில் Paytm பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

  • பின் Recharge and Pay Bill பகுதிக்குச் செல்லவும்

  • அங்கே Book a cylinder என்ற விருப்பத்தை அங்கே பார்ப்பீர்கள்

  • அதில் உங்கள் எரிவாயு வழங்குநரான பாரத் வாயு / ஹெச்பி வாயு / இந்தேன் ஆகியவற்றைத் தேர்வுசெய்யுங்கள்

  • அதன் பின்னர் உங்களது மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடி நம்பரைப் பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும்.

  • நுகர்வோரின் பெயர், சிலிண்டர் ஏஜென்சி பெயர், சிலிண்டரின் விலை போன்ற விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

700 கேஷ் பேக் பெறுவது எப்படி?

புக்கிங் செய்யும்போது FIRSTLPG என்ற புரோமோ கோடை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் உங்களுக்கு 700 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும்.
Paytm-ன் இச்சலுகை மார்ச் 31 வரை மட்டுமே. சென்னையில் தற்போது சிலிண்டர் விலை 835 ரூபாயாக இருக்கிறது. பேடிஎம் கேஷ் பேக் சலுகையில் சிலிண்டர் புக்கிங் செய்து 700 ரூபாய் கேஷ் பேக் கிடைத்தால் ரூ.135க்கு சிலிண்டர் வாங்கலாம்.

English Summary: With this special offer from Paytm you can get a gas cylinder for Rs.135 Details inside !! Published on: 29 March 2021, 05:33 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.