1. Blogs

மத்திய அரசு ஊழியராக ஆசையா?ரூ.1 லட்சம் சம்பளத்தில் விமானத்துறையில் வேலை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

அரசு வேலை என்பது நம்மில் பலருக்குக் கனவாக இருக்கும். ஆனால் தங்கள் கனவாக நனவாக்கக் கடின முயற்சியைப் போட்டு, முழுமையாக உழைப்பவர்களுக்கு வெற்றி சாத்தியமாகி விடுகிறது. அப்படி மத்திய அரசு ஊழியராக வேண்டும் என எண்ணுபவரா நீங்கள்? அப்படியானால் இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. தற்போது  
மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Junior Executive (Air Traffic Control)

கல்வித் தகுதி (Education Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதம் அல்லது இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

வயது (Age)

  • 14.07.2022 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம் (Salary)

ரூ.40,000 - 140000 (வருடத்திற்கு ரூ. 12 லட்சம்)

தேர்வு முறை (Selection)

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் ஆன்லைனில் விமானப் போக்குவரத்துத் துறையின் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1000 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு ரூ.81ஆக உள்ளது.

கால அவகாசம்

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.07.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க...

லட்சாதிபதியாக விருப்பமா? சீக்ரெட் விஷயம் இதோ!

ஒரு ஆப்பிள்… இத்தனை நன்மைகளா?

English Summary: Work in the aviation sector with a salary of Rs 1 lakh! Published on: 13 June 2022, 11:13 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.