டிஜிட்டல் தங்கத்தை நீங்கள் ஒரு ரூபாய்க்குக் கூட வாங்கலாம். இந்த முறையில் பாதுகாப்பாக எப்படித் தங்கம் வாங்குவது என்பது பற்றிப் பார்ப்போம்.
பெண்களின் விருப்பம்
நாம் அணிந்திருக்கும் ஆடை, அணிகலன்கள்தான் நம்முடைய வசதியை, கவுரவத்தை அச்சிட்டுக்காட்டும் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
அந்த வகையில், தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன அணிகலன்களை அணிவது நம் பாரம்பரியம். இருப்பினும் இதில் தங்கம்தான் எப்போதுமே பெண்களின் விருப்பமாக இருக்கும்.
இதன் காரணமாகவே, மற்ற உலோகங்களைக் காட்டிலும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
லாபம் தரும் முதலீடு (Profitable investment)
எனவே தங்கம் என்பது இந்தியர்களின் அந்தஸ்தை வெளிப்படுத்தும் அளவுகோலாகவேத் திகழ்கிறத. சிலர் தங்கம் வைத்திருப்பதையே கௌரவமாக நினைப்பார்கள். அதை விட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் தங்கம் மிக சிறந்த முதலீட்டுப் பொருளாகும். முதலீடு செய்பவர்கள் அதில் 15 சதவீதத்தை தங்கத்துக்கு ஒதுக்குமாறு வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த அளவுக்கு அதிக லாபம் தரும் முதலீட்டுப் பொருளாகத் தங்கம் உள்ளது.
அதெல்லாம் சரிதான்! ஆனால் தங்கம் விற்கும் விலைக்கு அதை வாங்கி சேமித்து வைக்க முடியுமா? தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் தங்கத்தை வாங்குவதற்கு உங்களிடம் வெறும் ஒரு ரூபாய் இருந்தாலே போதும். இந்தத் தங்கம் உங்களுக்கு சொந்தம்.
டிஜிட்டல்
ஏனெனில், இது டிஜிட்டல் தங்கம். மொபைல் ஆப் மூலமாகவே வாங்கலாம். கூகுள் பே(Google pay), போன் பே (Phone Pay), பேடிஎம்(Paytm) போன்ற ஆப்களில் இந்த வசதி உள்ளது. ஹெச்டிஎஃப்சி பேங்க் செக்யூரிட்டீஸ், மோதிலால் ஓஸ்வால் ஆகியவற்றிலும் நீங்கள் டிஜிட்டல் தங்கம் வாங்கலாம்.
உதாரணமாக, நீங்கள் கூகுள் பே வைத்திருந்தால் அதில் கீழ் பக்கம் தங்கம் படம் போட்டிருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே சென்றால் தங்கம் வாங்கும் வசதி இருக்கும். தங்கத்தின் தற்போதைய விலை, நீங்கள் வாங்க நினைக்கும் பணத்துக்கு எவ்வளவு தங்கம் கிடைக்கும் போன்ற விவரங்களையும் நீங்கள் அதில் பார்க்கலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக (Little by little)
ஒரு ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய் என கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் தங்கம் வாங்கி சேமித்து வைக்கலாம். உங்களுக்குத் தேவைப்படும் போது சேமித்து வைத்த தங்கத்தை அதிலேயே நீங்கள் விற்றுவிடலாம். தங்கத்தின் விலை குறைவாக இருக்கும்போது வாங்குவதும், விலை அதிகரிக்கும்போது விற்பனை செய்வதும் சிறந்தது. நீங்கள் விற்பனை செய்யும் நேரத்தில் உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதையும் நீங்கள் முன்கூட்டியே பார்க்கலாம்.
முதலீடு அதிகரிப்பு (Increase in investment)
தங்கத்தை விற்பனை செய்வதற்குப் பதிலாக அதன் மதிப்புக்கு தங்க நாணயத்தையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அந்த ஆப்பிலேயே நீங்கள் ஆர்டர் செய்தால் வீடு தேடிவரும். சமீப காலங்களில் நிறையப் பேர் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க...
லட்சங்களை அள்ள சிறந்த வாய்ப்பு - உங்களிடம் 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால்!
இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!
Share your comments