தினமும் 160 ரூபாய் சேமித்து 23 லட்ச ரூபாய் வரை சேமிக்கும் எல்ஐசியின் (LIC) அருமையான திட்டம் குறித்து நாம் இங்கு காணலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க ஆயத்தமாக வேண்டும். உங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்சன் அல்லது முதலீட்டுத் தொகை உதவியாக இருக்கும். அதற்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
எல்ஐசி பாலிசி!
எல்ஐசி நிறுவனத்தின் நியூ மணி பேக் பாலிசி (New Money Pack Policy) திட்டத்தின் மூலமாக சிறிய தொகையைத் தொடர்ச்சியாக முதலீடு செய்து குறுகிய காலத்தில் மிகப் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். இத்திட்டத்தில் இரண்டு வசதிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். 20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் முதிர்வில் நீங்கள் சேமிப்புப் பணத்தை (Savings Money) எடுத்துப் பயன்பெறலாம். தினமும் ரூ.160 சேமித்து வந்தாலே 25 ஆண்டுகளில் உங்களால் ரூ.23 லட்சம் சம்பாதிக்க முடியும்.
ஐந்தே ஆண்டில் பணம்!
எல்ஐசியின் நியூ மணி பேக் பாலிசி திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் 15 முதல் 20 சதவீத தொகையைப் பெறமுடியும். இதோடு முதிர்வுக் காலத்தில் போனஸ் (Bonus) தொகையும் கிடைக்கும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்த பாலிசிக்கு முற்றிலும் வரி விலக்கு (Tax Free) அளிக்கப்படுகிறது.
முதலீடு:
இத்திட்டத்தில் குறைந்தபட்ச உறுதிப் பணம் ரூ.1 லட்சமாகும். அதிகபட்ச வரம்பு இல்லை. 13 வயது முதல் 50 வயது வரையில் இத்திட்டத்தில் இணையலாம். வருடாந்திர பிரீமியம் (Premium) தொகை ரூ.60,025. ஆறு மாதங்களுக்கு ரூ.30,329, மூன்று மாதங்களுக்கு ரூ.15,323 மற்றும் மாதத்துக்கு ரூ.5,108 பிரீமியம் செலுத்த வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கான திட்டம்!
மகள்களுக்கான திருமணச் செலவுகளை நோக்கமாகக் கொண்டு கன்யாதான் பாலி திட்டத்தை எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நீங்கள் தினமும் ரூ.121 முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் ரூ.23 லட்சம் சம்பாதிக்கலாம். அதாவது மாதத்துக்கு ரூ.3,600 பிரீமியம் (Premium) செலுத்த வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் தற்போதைய பேலன்ஸை பார்ப்பது எப்படி?
Share your comments