பழைய நாணயங்களைப் பொக்கிஷங்களாகப் பாதுகாப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு அடிக்கப்போகிறது யோகம்.சமீப நாட்களாக ஆன்லைனில் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் விற்பனை செய்யும் போக்கு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் இப்போது பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காரணம், அதற்கு லட்சங்களிலும் கோடிகளிலும் லாபம் கிடைப்பதுதான். இது இப்போது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது.
ஏன் டிமாண்ட்?
புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பழைய நாணயங்களுக்கும் ரூபாய் நோட்டுகளுக்கும் ஆன்லைனில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இவை அரிய வகையாக இருக்க வேண்டும். சிலர் அதிர்ஷ்டத்தை நம்பி இந்த வகை நாணயங்களை வாங்கிச் செல்கின்றனர். விற்பவருக்கும் அதிர்ஷ்டம் இருந்தால் லட்சாதிபதி ஆகிவிடலாம்.
ஒரு ரூபாய் நாணயம்
உங்களிடம் ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.2.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். எல்லா ஒரு ரூபாய் நாணயத்துக்கும் பணம் கிடைத்துவிடாது. அந்த நாணயம் 1985ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், அதில் H என்ற குறியீடு இருக்க வேண்டும். இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் சோளக் கதிரும் மறு பக்கத்தில் அசோகர் தூணும் இடம்பெற்றிருக்கும். இது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்டது.
2 ரூபாய் நாணயம்
உங்களிடம் 2 ரூபாய் நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.5 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். Quikr வெப்சைட்டில் நீங்கள் இதை விற்பனை செய்யலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த 2 ரூபாய் நாணயம் 1994, 1995, 2000 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும். இந்த நாணயங்களுக்குத்தான் Quikr வெப்சைட்டில் ரூ.5 லட்சம் வரையில் கிடைக்கிறது.
2 ரூபாய் நோட்டு
பழைய 2 ரூபாய் நோட்டு ஆன்லைன் ஏலத்தில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. அரிய நாணயங்கள், நோட்டுகளை சேகரிப்போர் இவ்வளவு விலை கொடுத்து வாங்குகின்றனர். இந்த 2 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் ‘786’ இருக்க வேண்டும். மேலும், 2 ரூபாய் நோட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், நோட்டில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் மன்மோகன் சிங் கையெழுத்து இருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்வதற்காக சில மோசடி அமைப்புகள் ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அப்படி நீங்களும் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ தயாராக இருந்தால், முதலில் ரிசர்வ் வங்கியின் இந்த தகவலை கண்டிப்பாக சரிபார்க்கவும்.
மேலும் படிக்க...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!
Share your comments